சிலிர்க்கவைக்கும் திகில் க்ரைம் டிராமா இன்ஸ்பெக்டர் ரிஷி-இன் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது

மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் நந்தினி ஜே.எஸ் உருவாக்கி, சுக்தேவ் லஹிரி தயாரித்த தமிழ் சித்திரத்தில் நவீன் சந்திரா நாயகனாகவும், சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் ரிஷி, மார்ச் 29 முதல் இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யக் கிடைக்கும்.

டிரையிலர் இணைப்பு: https://youtu.be/4CKU89MI0_0?si=Z1XVP-v1vDefBNXO

மும்பை, இந்தியா- மார்ச் 19, 2024 – மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் திகில் நாடகத் தொடரான இன்ஸ்பெக்டர் ரிஷியின் உணர்வுப் பூர்வமான டிரெய்லரை.. பிரைம் வீடியோ பிரசண்ட்ஸ், இந்தியா என்ற பிரமாண்ட நிகழ்வில், இந்தியாவில் அனைவரின் ஆதரவு பெற்ற பொழுதுபோக்குத் தளமான பிரைம் வீடியோ, வெளியிட்டது. நந்தினி ஜே.எஸ் உருவாக்கிய இந்தத் தொடரில் நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார், மேலும் சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல திறமை வாய்ந்த நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பத்து எபிசோட்கள் கொண்ட இத்தொடர் மார்ச் 29 அன்று பிரத்யேகமாக பிரைம் வீடியோவில் இந்தியாவிலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் பிரீமியர் செய்யப்பட உள்ளது. இன்ஸ்பெக்டர் ரிஷி பிரைம் மெம்பர்ஷிப்பில் சமீபத்திய சேர்க்கை ஆகும். இந்தியாவில் ஆண்டுக்கு ₹1499 செலுத்தி உள்ள பிரைம் மெம்பராக உள்ளவர்கள் குறைந்த செலவில் வசதியாக பொழுதுபோக்கை அனுபவிக்கமுடியும்.

இத் தொடர், பசுமை மற்றும் வனவிலங்குகள் நிறைந்த தமிழ்நாட்டின் ஒரு அழகிய கிராமத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. ஆனால் சூழல். இன்ஸ்பெக்டர் ரிஷி மற்றும் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள், (அய்யனார் மற்றும் சித்ரா,) காட்டின் ரகசியங்களை வெளிக்கொணரும் மற்றும் இந்த விவரிக்க முடியாத நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையைக் கண்டறியும் சவாலை ஏற்கின்றனர். மூவரும் தங்களுடைய தனிப்பட்ட வாழ்வில் உள்ள சவால்களை கடந்து செல்வது மட்டுமின்றி, அவர்களின் உறுதியையும் திறன்களையும் சோதிக்கும் அமானுஷ்ய சக்திகளுடன் போரிடுகிறார்கள்.

“இன்ஸ்பெக்டர் ரிஷி வேடத்தில் நடிப்பது சவாலான மற்றும் மாறு[பட்ட அனுபவமாக இருந்தது. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் பன்முகத் தன்மையை அறிந்து கதாபாத்திரத்தை உள்வாங்க இத்தொடர் எனக்கு வாய்ப்பை வழங்கியது,‘’ என்று நவீன் சந்திரா கூறினார். “இந்தத் தொடர் பிரைம் வீடியோவுடனான எனது இரண்டாவது தொடராகும். இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரின் புதிரான உலகத்தை பார்வையாளர்கள் மிகவும் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.

“இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரில் வன அதிகாரி காத்தியின் பாத்திரத்தை ஏற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கதாசிரியர்கள் எனது கதாபாத்திரத்தை மிக நுணுக்கமாக செதுக்கியிருக்கிறார்கள், மேலும் காத்தியின் குணாதிசயங்கள் என்னுடன் ஆழமாக எதிரொலித்தன. செட்டில் இருந்த ஆதரவான சூழல், திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் இணைந்து, காத்தியின் மென்மையான மற்றும் கடுமையான ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்த அனுமதித்தது, ”என்று சுனைனா பகிர்ந்து கொண்டார். “நந்தினி ஜே.எஸ்-இல் பிரைம் வீடியோவுடன் இணைந்து பணிபுரிந்த அனுபவம் அளப்பரியது. இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரின் மூலம் இயற்கை, அமைதி மற்றும் மர்மம் நிறைந்த ஒரு உலகத்திற்கு பார்வையாளர்களை வெற்றிகரமாக இட்டுச் செல்வோம் என்று நான் நம்புகிறேன்.” என்று மேலும் கூறினார்.