மிக உயரமான கப்கேப் டவருக்கான கின்னஸ் உலக சாதனையை தகர்த்தது!
40 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் 18818 கப்கேக்குகளைக் கொண்டு 41.8 அடி கோபுரத்தை உருவாக்கிய ப்ரீத்தி கிச்சன் அப்ளையன்சஸ்
சென்னை, 20 ஜனவரி 2019: 18818 கப்கேக்குகளைக் கொண்டு 41.80 அடி உயரமான கோபுரத்தை ஃபுட் கான்சுலேட் நிறுவனத்துடன் இணைந்து கட்டமைத்து உருவாக்கியதற்காக கின்னஸ் சாதனைகள் புத்தகத்தில் ப்ரீத்தி கிச்சன் அப்ளையன்சஸ் இடம் பிடித்திருக்கிறது. 35 அடி உயரமுள்ள கோபுரத்தை ஒரு தென்னாப்பிரிக்க நிறுவனம் உருவாக்கியிருந்த முந்தைய சாதனையை இதன் மூலம் இது தகர்த்திருக்கிறது. தாங்கள் செயல்படுகிற அந்தந்த பிரிவுகளில் மிகச்சிறந்ததாக அறியப்படும் இந்த இரு பிராண்டுகளாலும் இந்த நிகழ்வானது, மிக அழகாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. கேக்குகளை தயாரிப்பதில் பல ஆண்டுகள் சிறப்பான அனுபவம் உள்ள நிபுணர் செஃப்களை ஃபுட் கான்சுலேட் இதற்காக ஏற்பாடு செய்திருந்தது. இந்த கப்கேக்குக்கான ரெசிபியை இவர்கள்தான் உருவாக்கியிருந்தனர். மறுபுறத்தில், கப்கேக் மாவை தயாரிப்பதற்காக மாஸ்டர் செஃப் பிளஸ் ஜார் உடன் வருகிற தங்களது மிகச்சிறந்த தயாரிப்பான ஸோடியாக் மிக்ஸர் – கிரைண்டர் சாதனத்தின் வழியாக, சமையலறை சாதனங்கள் தொழில்துறையில் தாங்கள் கொண்டிருக்கும் அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் ப்ரீத்தி கிச்சன் அப்ளையன்சஸ் இந்நிகழ்விற்காக வழங்கியிருந்தது.
இந்த இரு நிறுவனங்களின் ஒருமித்த ஒத்துழைப்பின் விளைவாக அழகான தோற்றத்துடன், மிக அருமையான வென்னிலா மேற்பூச்சுடன் அற்புதமான சுவையில் இந்த கப்கேக்குகள் உருவாக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வின்போது 41 மணி நேரங்கள் என்ற காலஅளவிற்குள் 1411 கி.கி. எடையுள்ள கப்கேக் தயாரிப்பிற்கான மாவு தயாரிக்கப்பட்டது. இந்த மாவை தயாரிப்பதற்கு தொடர்ந்து தீவிரமாக செய்யப்பட்ட கலவை செயல்பாட்டிற்குப் பிறகும்கூட இந்த மிக்ஸர் கிரைண்டர்கள்,எவ்வித களைப்புமின்றி, மாவு கலவைக்கான புதிய சுழற்சியை தொடங்க தயாராக இருந்தன. ப்ரீத்தி கிச்சன் அப்ளையன்ஸசின் நிர்வாக இயக்குநர் திரு. எஸ். சுப்ரமணியன், ஃபுட் கான்சுலேட்-ன் இயக்குனர் திரு. ஆ. முகம்மது அலி,ஆகியோருக்கு இந்த சாதனையைப் படைத்ததற்காக கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. தயாரிக்கப்பட்டிருந்த இந்த கப்கேக்குகள் நகரத்தின் பல்வேறு தொண்டு நிறுவன அமைப்புகளுக்கு வினியோகிக்கப்பட்டன.
தொடர்ச்சியான 500 கி.கி. கேக் தயாரிப்பதற்கான மாவை அரைத்ததன் மூலம் மிக நீண்ட மிக்ஸர்-கிரைண்டர், கிரைண்டிங் மாரத்தான் என்ற பிரிவுக்காக ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் – ல் ப்ரீத்தி கிச்சன் அப்ளையன்சஸ் தனது பெயரை சில காலத்திற்கு முன்புதான் இடம் பெறச் செய்கிற சாதனையை நிகழ்த்தியிருந்தது. நம் நாட்டிலேயே தொடங்கப்பட்டு, பிரபலமடைந்திருக்கும் இந்த பிராண்டு,சென்னை மாநகரில், மிக உயரமான கப்கேக் டவரை உருவாக்குவதற்காக நடந்த இந்நிகழ்வின் மூலம் கின்னஸ் உலக சாதனையை வெற்றிகரமாக தகர்த்து புதிய சாதனை படைத்து,தன்னை இன்னும் உயர்த்திக்கொண்டிருக்கிறது.
கின்னஸ் உலக சாதனையோடு இந்த ஆண்டை தொடங்குவது எங்களுக்கு பெருமையளிக்கும் ஒரு தருணமாகும். 41.8 அடி உயரமுள்ள இந்த கோபுரம், அர்த்தமுள்ள புத்தாக்கம், சமரசம் செய்துகொள்ளாத தரம் மற்றும் வகையினத்தில் மிகச்சிறந்த சேவை என்ற எங்களது 40 ஆண்டுகால பாரம்பரியத்தை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது. உணவு தயாரிப்பு துறையில் ப்ரீத்தியின் திறனையும், ஆதிக்கத்தையும் சுட்டிக்காட்டும் இந்த கின்னஸ் சாதனை,எங்களது உயர்தரமான தயாரிப்பு பொருளின் தரம் மற்றும் நீடித்து உழைக்கும் நிலைப்புத்தன்மையைப் பறைசாற்றுகிறது. இந்த கப்கேக் கோபுர சவாலானது, ஒரு கடினமான செயல்திட்டமாகும். எங்களது கடுமையான உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் இதனை வெற்றிகரமான சாதனையாக ஆக்கியிருப்பது குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்று திரு. எஸ். சுப்பிரமணியன் கூறினார்.
ப்ரீத்தி ஸோடியாக் மிக்ஸர் -கிரைண்டர் பற்றி பேசிய இந்நிறுவனத்தின் சந்தையாக்கல் துறையில் பொது மேலாளர் ஸ்வேதாசாகர் உலகளாவிய கலாச்சாரங்கள், உணவுகள் மற்றும் சமையல் முறைகளோடு நல்ல பரிட்சயம் நுகர்வோர்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் நிலையில் எங்களது தயாரிப்புகள், வளர்ச்சியடைந்து வரும் சுவையரும்புகளை பூர்த்திசெய்ய திறனுள்ளவையாக இருப்பதை உறுதி செய்வது அத்தியாவசியமாக ஆகியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு மிக்ஸர் கிரைண்டரில் கேக் தயாரிப்புக்கான மாவை தயாரிக்க முடியும் என்று யார்தான் நினைத்திருக்க முடியும்? எமது தயாரிப்பு பொருட்கள் அனைத்து வகையான உணவு முறைகளுக்கும் பொருத்தமானவை என்பதை இந்த நிகழ்வு வெற்றிகரமாக எண்பித்திருக்கிறது. இட்லிகளிலிருந்து, கப்கேக்குகள் வரை அனைத்து வகை உணவு தயாரிப்புகளுக்கும் எமது மிக்ஸர் கிரைண்டர்கள் திறன்கொண்டவை, என்று கூறினார்.
இந்த சாதனை முயற்சி குறித்து விளக்கமளித்த ஃபுட் கான்சுலேட் நிறுவனத்தின் இயக்குனர் திரு. ஆ. முகம்மது அலி, 150 நபர்கள் அடங்கிய எமது குழு, இந்த சவாலை வெற்றிகரமாக பூர்த்தி செய்ய பகல் இரவு என்று பார்க்காமல், கடுமையாகவும், நேர்த்தியாகவும் உழைத்திருக்கிறது. இரண்டு மாதங்கள் என்ற காளஅவில் தீவிரமான திட்டமிடல், ஆர்வம்மிக்க பணி, சவால்களுடன் எண்ணற்ற பரிசோதனை முயற்சிகள் மற்றும் வெற்றிகாண வேண்டும் என்ற ஆழமான விருப்பம் ஆகிய பல அம்சங்களின் விளைவே இந்த சாதனை. மிகக் குறைந்தகால அளவிற்குள் முறையான ஒருங்கிணைப்பு இருப்பதை உறுதி செய்வதற்காக,மூலப்பொருட்களை கலவை செய்வதிலிருந்து கப்கேக்குகள் மீதான ஃப்ராஸ்டிங் வரை செயல்முறை தொடர்நிகழ்வை வல்லுனர்களான எமது செஃப்கள் மிகத் துல்லியமாக திட்டமிட்டு செயல்படுத்தினர். இதுவொரு கடினமான பணியாக இருந்தபோதிலும் இதை நாங்கள் முற்றிலுமாக அனுபவித்து செயல்படுத்தினோம்.ப்ரீத்தி ஸோடியாக் மிக்ஸர் கிரைண்டர் எங்களுக்கு இப்பணியில் மிகப்பெரிய உதவியாக இருந்தது.
கேக்கிற்கான மாவு கலவையை தயாரிப்பதை விரைவாகவும் மற்றும் வியக்கத்தக்க வகையில் எளிதாகவும் செய்தது. இது ஒரு மிகப்பெரிய அளவிலான ஒரு குழு முயற்சியாகும். இப்பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் அவர்கள் வழங்கிய ஆதரவிற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,என்று கூறினார்.
இந்த விழாவில் பேசிய உமேஷ் ஐயர்இ பொது மேலாளர்இ ஃபோறம் விஜய மால் கூறுகையில்: “இந்த மதிப்புமிக்க நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உற்சாகமான அணி இந்த கோபுரத்தை கட்டியெழுப்ப பார்க்க ஒரு முற்றிலும் பரபரப்பான அனுபவமாக இருந்தது. இந்த முயற்சியை ஊக்குவிப்பதற்காக கூடிவந்த வாடிக்கையாளர்களைப் பார்க்க உற்ச்சாகமாக இருந்தது.