பிரவோலியன் பேஷன் வீக் என்பது நம் நாட்டின் மிகவும் பிரபலமான நிகழ்வு.
நவம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோலா நட்சத்திர ஹோட்டலில் PRAWOLION EVENTZ மூலம் நடைபெற்றது.
The Prowolion Fashion week நடத்திய நிகழ்ச்சியில் சிறந்த நடன இயக்குனர் விருதுபெற்ற திரு கருண் ராமன் அதைதொடர்ந்து 3 ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் சமீர்கணும் கலந்துகொண்டனர்.
இந்த பேஷன் வார நிகழ்வை, பிரபல ஆடை வடிவமைப்பாளர் பந்தனா நருலா தொடங்கிவைத்தார். அதை தொடர்ந்து, மோக்ஷம், திவா, தீபிகா பிள்ளை, ஶ்ரீலங்காவை சேர்ந்த சனீத் , மும்பையைச் சேர்ந்த கென் ப்ரன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பிரபல நட்சத்திரங்களான காயத்ரி ரெட்டி, வானிபோஜன், யாஷிகா ஆனந்த், அனுகீர்த்திவாஸ், ரம்யா பாண்டியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதி, விவசாயிகள் மற்றும் விவசாய நலன்களை ஆதரிப்பதற்காகவும், விவசாய நிலங்களில் போடப்படும் ஆழ்துளை கிணறு வசதியை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கு வழங்கப்படும்.
இதன்மூலம், திரு கருண் ராமன் தனது புதிய அம்சங்களுடன் இந்த நிகழ்வை அடுத்த கட்ட ஃபேஷனுக்கு மாற்றியுள்ளார்.