பிரசன்னா மற்றும் சினேகா தம்பதியினர் நலிந்த விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கினர். விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பலரும் குரல் கொடுத்து வரும் இவ்வேளையில் பிரசன்னா சினேகா தம்பதியினர் இந்த செயலில் இறங்கியுள்ளது பாராட்டுக்குரியது.
இந்நிகழ்ச்சியை விஷாலால் துவக்கிவைக்கப்பட்ட Friends Of Farmers எனும் அமைப்பால், அவரது மேலாளர் முருகராஜ் மற்றும் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரி ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் நடிகர் விஷால் நலிந்த விவசாயிகள் 1௦ பேருக்கு உதவியதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வு இது என்பது குறிப்பிடதக்கது.