70 களில் நியூயார்க் நகரில் உதயமான இந்த ஹிப் ஹாப் இசை, இதர நாடுகளுக்கும் பரவி பிரபலமாகத் துவங்கியது ! ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் கூட பலத்த வரவேற்பினை பெற்றது!
ஹிப் ஹாப் இசை வடிவத்தைப் பொருத்த வரையில், 5 அடிப்படை தூண்கள் உள்ளன எனலாம்.
M . C . எனப்படுகிற ஒரு பணி. Master of Ceremony என்பதை தமிழில் -சொல்லிசை வேந்தர் என்பர்.
D . J . என்பது இசைத்தட்டு வழங்குபவரை குறிக்கும்.
Break Dance நடனம் ஆடுபவர்களை குறிக்கும்.
Graffiti என்பது பொது இடங்களிலுள்ள சுவர்களில் ஹிப் ஹாப் இசை சம்மந்தப்பட்ட நிகழ்வுகளை சித்திரமாக வரைவது.
ஐந்தாவது மேல் குறிப்பிட்ட அனைத்து பற்றியும் முழுமையான ஒரு தெளிவு (ஞானம் எனலாம் )
Stony Psyko. & Rajesh Radhakrishnan – (DopeDaddy) ஆகிய இருவரும் Dharavi United என்கிற பெயரில் ஒரு ஹிப் ஹாப் இசைக் குழுவினை மும்பையில் நடத்திவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
சென்னையைச் சேர்ந்த தமிழர்கள் ஆகையால், தமிழிலும் கூட இவர்கள் ஹிப் ஹாப் வகையிலான இசையை ராப் செய்து வருகிறார்கள்!
ஹிப் ஹாப் இசை வடிவினை அடுத்த உயர் நிலைக்கு கொண்டு செல்வதுதான் இவர்களது இலக்கு!
ராப் முறை இசையை தமிழிலும் பிரபலப்படுத்துவதுதான் இவர்களது இசைப் பயணத்தின் குறிக்கோள் !
இந்தியாவில் உள்ள பல மொழிகளிலும் மொத்தம் 16 மொழிகளில் ராப் இசைப் பாடல்களை இவர்களது இசைக் குழு பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது !
ரஜினிகாந்த் நடித்த பா. ரஞ்சித்தின் காலா படத்தில் இவர்கள் நடித்து இசைத்தது நினைவிருக்கலாம்.
சமீபத்தில் ஓடிடியில் வெளி வந்த பாவக் கதைகள் தொகுப்பில் Stony Psyko நடித்து ராப் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
சென்னையில் நடைபெறும் இந்த ஹிப் ஹாப் இசைத் திருவிழா, தமிழர்களுக்கான ஒரு பொங்கல் பரிசு என கொள்ளலாம்.
ராப் வகையிலான இசையை வளர்ப்பதற்கும் அக்கலையில் சம்மந்தப்பட்டுள்ள இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் இந்த இசை விழா ஒரு கருவியாக செயல்படும் என்பதில் சந்தேகமில்லை !