கணேஷ் சந்திரா இயக்கத்தில், அஜய் தீஷன், தனுஷா, பாண்டிராஜன், சுனில், லட்சுமி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக்பாஸ் சத்யா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பூக்கி.
அஜய் தீஷன் தனுஷா இருவரும் காதலர்களாக இருக்கிறார்கள் படத்தின் ஆரம்பத்திலேயே இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள்.
அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டாலும் அவர்களால் தங்களுடைய பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள்.
அவர்கள் இருவரும் தங்களுடைய காதல் பிரிவிலிருந்து வெளிவருவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் ஆனால் அது எல்லாமே தோல்வியில் முடிகிறது.
காதல் பிரிவின் வலியை சரி செய்ய மற்றொரு காதலால் தான் முடியும் என்று நினைக்கிறார்கள். அதன்படி அவர்கள் இருவரும் வேறு வேறு காதலை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். அந்த காதல் அவர்களின் காதல் வலியை மறைத்து வாழ வைத்ததா? இல்லையா? என்பதே பூக்கிப் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : கணேஷ் சந்திரா
இசை மற்றும் படத்தொகுப்பு : விஜய் ஆண்டனி
கதை திரைக்கதை வசனம் : புதிய பரிதி
தயாரிப்பு : விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி மீரா விஜய் ஆண்டனி
மக்கள் தொடர்பு : சதீஷ் (ஏய்ம்)

