பொய்க்கால் குதிரை விமர்சனம் 3.5/5

கதிரவனாகிய பிரபுதேவா விபத்தில் மனைவியையும், ஒரு காலையும் இழந்து தன் எட்டு வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார். தன் மகளுக்கு இருதயத்தில் பிரச்சனை ஏற்பட்டு 70 லட்சம் ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்யும் சூழலுக்கு ஆளாகிறார். பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தில் வேலை செய்யும் கதிரவனால் அவ்வளவு பெரிய தொகை கட்ட முடியாமல் தவிக்கிறார். சிறையில் இருக்கும் அப்பா பிரகாஷ்ராஜ் பணக்கார பெண்ணான ருத்ராவாகிய வரலட்சுமி சரத்குமாரின் மகளை கடத்தி மிரட்டி பணம் வாங்கும் திட்டத்தை சொல்கிறார். முதலில் இதற்கு மறுக்கும் கதிரவன், பின்னர் வேறு வழியின்றி நண்பன் மதனாகிய ஜெகனுடன் கூட்டணி வைத்து கடத்த திட்டமிட்டு ருத்ரா மகள் படிக்கும் பள்ளிக்கும் செல்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக ருத்ராவின் குழந்தை அதே நாளில் கடத்தப்பட, கதிரவன் போடும் திட்டம் வீணாவதோடு, ருத்ராவிடம் மாட்டிக் கொள்கிறார். ருத்ராவின் குழந்தையை கடத்தியது யார்? கதிரவன் ருத்ராவின் குழந்தையை மீட்டாரா? குழந்தையை கடத்தியதற்கான காரணம் என்ன என்பதே படத்தோட மீதிகதை

நடிகை-நடிகர்கள்:

பிரபுதேவா, வரலட்சுமி சரத்குமார், ஜான் கொக்கேன், ஜெகன், பிரகாஷ்ராஜ், ஷ்யாம், ரைசா வில்சன், பரத், குழந்தை ஆழியா, குழந்தை ருத்ரா மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

ஒளிப்பதிவு : பல்லு
இசை : டி.இமான்
பாடல்கள் : கார்க்கி
ஸ்டண்ட் : தினேஷ் காசி
கலை : பாபாநாடு உதயகுமார்
நடனம் : சதீஷ் மற்றும் பூபதி
வசனம் : மகேஷ்
உடை : ஜெயலட்சுமி
படத்தொகுப்பு : ப்ரீத்தி மோகன்
இயக்கம் : சந்தோஷ் பி ஜெயக்குமார்
தயாரிப்பு மேற்பார்வை : சி.பி.ஜெய்
நிர்வாக தயாரிப்பு : கே.மதன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்