குமரி மாவட்டத்தை பார்வையிட வரும் பிரதமர் மோடி

டிசம்பர் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை  பார்வையிட உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக ராகுல்காந்தி ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை டிசம்பர் 19ஆம் தேதி பார்வையிட உள்ளார்.