விருப்பமில்லாத கட்டாய திருமணத்தை செய்யும் பெண்களை திருமணத்தன்று தூக்கி வந்து காதலனுடன் சேர்த்து வைக்கும் கல்யாணத்தை நிறுத்தும் வேலை செய்கிறார் சிரிஷ், இதனால் பல திருமணங்கள் நின்று விட, ஊர்மக்கள் சிரிஷ் மீது கோபத்துடன் இருக்கின்றனர். இதனிடையே சிரிஷ் மிருதுளா முரளியை காதலிக்க, மிருதுளாவோ இந்த வேலையை விட்டு விட்டு வந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறார். இதற்கு சம்மதிக்கவும் செய்கிறார் சிரிஷ். ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு திருமணத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட, இதைப் பற்றி தெரிய வரும் மிருதுளா சிரிஷை வெறுக்கிறார். அதே சமயம் சிரிஷின் ஜாதகத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் திருமணம் செய்து வைக்க வேண்டும் இல்லையென்றால் குடும்பத்திற்கு ஆபத்து என்பதால் சிரிஷின் பெற்றோர் மும்முரமாக பெண் தேடுகின்றனர். ஆனால் சிரிஷ்க்கு பெண் கொடுக்க ஊர் மக்கள் மறுக்கின்றனர். சிரிஷின் நண்பர்கள் திருமணத்தை நடத்தியே தீர வேண்டும் என்று மண்டபம், பத்திரிகை, பேனர், சமையல் என்று அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஏற்பாடு செய்கின்றனர். நாள் நெருங்க நெருங்க பெண் கிடைக்காமல் அலைகின்றனர். கடைசியில் சிரிஷிற்கு திருமணம் நடந்ததா? இல்லையா? சிரிஷ் யாரை திருமணம் செய்து கொண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகை-நடிகர்கள்:
மெட்ரோ சிரிஷ், மிருதுளா முரளி, அருந்ததி நாயர், சதீஷ், யோகி பாபு,
கு. ஞானசம்பந்தன், தாட்சாயினி, லொள்ளு சபா சுவாமிநாதன், செந்தில், நமோ நாராயணன் மற்றும் பலர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
தயாரிப்பு : ஒன் மேன் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் : ரமேஷ் பாரதி
இசை : தருண்குமார்
ஒளிப்பதிவு : எம்.விஜய்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, ரேகா டி’ ஒன்