கோவில்பட்டியில் மக்களின் குறைகளை கேட்கமால் வாட்ஸ் அப் பார்த்த கோட்டாட்சியர் அதிருப்தியில் மக்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி வருவாய் கோட்டத்தில் வாழ்ந்து வரும் காட்டுநாயக்கர் சமூக மக்களுக்கு கடந்த சில வருடங்களாக சாதிசான்றிதழ் வழங்கமால் காலதாமதம் செய்து வருவதால் அந்த சமூகத்தினை சேர்ந்த மாணவர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும், சாதிசான்றிதழ் இல்லாமல் கல்வி சலுகைகள், கல்வி உதவிதொகை மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்கமால் அவதிப்பட்டு வருவதால் அந்த சமுதாய மக்களுக்கு விரைந்து சாதிசான்றிதழ் வழங்க கோரி, மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் காட்டு நாயக்கர் சமூகத்தினை சேர்ந்த மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சி.பி.எம். நகர செயலாளர் முருகன், மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா, நகரக்குழு உறுப்பினர் சக்திவேல் முருகன், காட்டுநாயக்கன் சங்க மாவட்ட தலைவர் காளிமுத்து, கிளை தலைவர் முனியப்பன், துணை தலைவர் பாண்டிக்குமார், பொருளாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோட்டாட்சியர் அனிதாவை சந்தித்து, மனு அளித்து தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை குறித்து தெரிவித்தனர்.

ஆனால் கோட்டாட்சியர் அவர்கள் கூறுவதை எதையும் காதில் வாங்கி கொள்ளமால், தொடர்ந்து தனது செல்போனில் வாட்ஸ் அப் பார்த்து கொண்டு இருந்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையெடுத்து அவர்கள் வெளியேறி கோட்டாட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் குறைகளை கேட்கமால் கோட்டாட்சியர் அலட்சியமாக செல்போனில் வாட்ஸ் அப் பார்த்து கொண்டு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வரும் 17ந்தேதிக்குள் சாதிசான்றிதழ் வழங்கவிட்டால் 18ந்தேதி முதல் காத்தியிருப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.