வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில், கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ராமச்சந்திரன்.பி இயக்கத்தில், பால சரவணன், காயத்ரி சங்கர், தேவ், ப்ரீத்தி நெடுமாறன், ஜனா, முரளி, சீனியம்மாள் (பேச்சி பட்டி), மகேஸ்வரன் கே, நாட்டுராஜா, சாந்திமணி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பேச்சி.
அரண்மனை காடு மலை கிராமத்திற்கு மலையேற்றம் செய்வதற்காக நண்பர்களான காயத்ரி சங்கர், தேவ், ப்ரீத்தி, மகேஸ்வரன், ஜனா ஆகிய ஐந்து பேரும் அங்கு வருகிறார்கள். அவர்களை அந்த காட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக அந்த ஊரில் இருக்கும் காட்டை பற்றி நன்கு தெரிந்த வன ஊழியரான பாலசரவணன் வருகிறார்.
பால சரவணன் வழிகாட்டுதலோடு காட்டுக்குள் செல்லும் நண்பர்கள் தடை செய்யப்பட்ட பகுதி என்ற ஒன்றை பார்க்கிறார்கள். அதற்குள் போக வேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆனால் பால சரவணன் அங்கே போகக்கூடாது என்று எச்சரிக்கிறார். போனால் பிரச்சனையாகி விடும் என்றும் கூறுகிறார். அதனை கேட்காமல் அதற்குள்ளே செல்கிறார்கள்.
அப்படி செல்லும்போது சேதுவும் சாருவும் அங்கே ஒரு பழைய வீட்டை பார்க்கிறார்கள். அந்த வீட்டை பார்க்க ஆர்வப்பட்டு அங்கே செல்கிறார்கள். அவர்கள் அந்த வீட்டை பார்க்கும்போது ஒரு வயதான பில்லி சூனியம் செய்யும் பொம்மையை பார்க்கிறார்கள்.
அதன் பிறகு பல விதமான விபரீதங்கள் ஏற்படுகின்றன. அங்கு போன ஒவ்வொருவரும் மர்மமான முறையில் காணாமல் போய் விடுகிறார்கள். இதற்கு காரணம் என்ன? அந்த பழைய வீட்டில் இருப்பது என்ன என்பதே பேச்சி படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இசை : ராஜேஷ் முருகேசன்
ஒளிப்பதிவு : பார்த்திபன்
படத்தொகுப்பு : இக்னேசியஸ் அஸ்வின்
கலை இயக்குனர் : குமார் கங்கப்பன்
ஆடை வடிவமைப்பாளர் : ப்ரீத்தி நெடுமாறன்
இணை தயாரிப்பு : விக்னேஷ் செல்வராஜன், தனிஷ்டன் ஃபெர்னாண்டோ, ராஜராஜன் ஞானசம்பந்தம், சஞ்சய் சங்கர்
மக்கள் தொடர்பு : சுரேஷ், தர்மா