சென்னைக்கும் சேலத்துக்கும் இடையில் அமைக்கத் திட்டமிட்டுள்ள எட்டு வழிச்சாலையை மையமாக வைத்து பசுமை வழிச்சாலை என்ற படம் தயாராகி வருகிறது.
சந்தோஷ் கோபால் இயக்கும் இந்த படத்தில் கிஷோர், பூஜா குமார், சமுத்திரகனி, பசுபதி உட்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திபெத், நேபாளம், பூடான், லடாக் பகுதிகளில் நடந்தது. இப்போது படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், உதய்ப்பூர், ஜெய்சல்மீர் உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ளது.
ராஜஸ்தானில் உள்ள பழங்காலக் கிணறு ஒன்றிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது என்பதுதான்.
இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் கடைசியாக இயக்கிய டார்க் நைட் ரைசஸ் (DARK NIGHT RISES) படத்தின் படப்பிடிப்பும் இங்குதான் நடந்துள்ளது! இது தவிர, அஜ்மீரிலுள்ள தர்காவிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.