Passion Studios சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரிப்பில் பிரபு ஜெயராம் இயக்கும் “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, நடிகர் ஜெயம் ரவி வெளியிட அது ரசிகர்களிடம் பெரும் வரவேர்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள படத்தின் மூன்று புதிய போஸ்டர்களும் படத்தின் கதையின் மையத்தை கூறி பெரும் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த மூன்று புதிய போஸ்டர்களும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டத்தை போற்றும்படி அமைந்துள்ளது.
இப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு படம் எப்படி இருக்குமென்கிற பெரும் ஆர்வத்தை மக்களிடையே தூண்டியுள்ளது. தயாரிப்பாளர்கள் இப்படத்தினை தமிழில் ஒரு புதியதாக “ Duplex “ என்ற வகையின் உருவாகும் படம் என்று கூறியுள்ளனர். இந்த வகை இரட்டை நிலையில் இருப்பதை குறிப்பது. உதாரணத்திற்கு ஒரு வீடு இரு வாசல் என்பதே இதன் சாராம்சம். படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க பொழுதுபோக்கு தன்மையுடன் கூடிய காதல் மற்றும் காமெடி கலந்தது, இரண்டாம் பகுதி ஜாதியினால் ஏற்படும் பிரச்சனைகள் திவிரமாக சொல்வதாக இருக்கும். இப்படத்தின் மேலும் ஒரு சுவாரஷ்யமான தகவல் என்னவென்றால், படத்தின் முதல் பகுதியில் 12 சிறந்த நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் படத்தின் இரண்டாம் பகுதியில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர். படத்தில் ரோகினி . R S கார்த்திக், ஜூனியர் பாலையா, மெட்ராஸ் மீட்டர் கோபால் மற்றும் நக்கலைட்ஸ் தனம் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க பார்வையாளர்களை திரையுடன் ஒன்றிபோக செய்யும், பொழுதுபோக்கு படமாக அமையும் என படக்குழு உறுதியாக நம்புகின்றனர். சமீபத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சிறப்பான திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படமும் இதே கதைகருவில் தான் உருவாகியுள்ளது. தமிழக அரசு இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாகவே, படக்குழு படத்தினை முடித்து, தணிக்கை (UA) சான்றிதழையும் பெற்றுவிட்டது. இருந்தபோதிலும், படக்குழு படத்தின் தலைப்பை மாற்றபோவது இல்லை, முதலில் வைக்கப்பட்ட அதே பெயரில் படத்தினை வெளியிட போகிறார்கள். படம் ஒரு பக்கத்தை சார்ந்ததாக இருக்காது இரண்டு பக்க நியாயங்களை கூறுவதாக இருக்கும் என படக்குழு உறுதியாய் கூறுகிறார்கள். இந்த கருவில் இருக்கும் நன்மை தீமைகள் பற்றி படம் பேசும். இயக்குனர் பிரபு ஜெயராம் படத்திற்காக நிறைய தரவுகளை ஆராய்ந்து அதன்படி படத்தின் திரைக்கதை அமைத்துள்ளார்.
கும்பகோணம் மற்றும் சென்னையை சுற்றிய பகுதிகளில் இப்படத்தின் படபிடிப்பு நடத்தபட்டது. பீச்சாங்கை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த RS கார்த்திக், இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். படம் முழுக்க முழுக்க கதையை மையப்படுத்தி நகரும் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும், ஹீரோ-ஹீரோயின்-வில்லனை மையப்படுத்தி நகரும் படமாக இருக்காது என படக்குழு கூறியுள்ளது. படத்தின் இசை, ட்ரெயிலர் மற்றும் திரையரங்கு வெளியீடு பற்றி Passion Studios விரைவில் அறிவிக்கவுள்ளனர்.
Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரித்துள்ள “என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படத்தை பிரபு ஜெயராம் இயக்குகிறார். RS கார்த்திக். ஐரா, பகவதி பெருமாள், ரோகினி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சண்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்ப குழு விபரம்
குணா பாலசுப்ரமணியம்- இசை
அருண் கிருஷ்ணா – ஒளிப்பதிவு
பிரகாஷ் கருணாநிதி- படதொகுப்பு
Teejay – கலை இயக்கம்
கார்த்திக் நேத்தா, ஜெகன் கவிராஜ், ரஞ்சித், M.S. முத்து, திவ்யா லக்ஷனா, ஸ்வேதா ராஜு – பாடல் வரிகள்
தேஜா- மேக்கப்
கிருஷ்ணன் சுப்ரமணியம்- ஒலிப்பதிவு
பென்னி தயால், வினீத் ஶ்ரீனிவாசன், குணா பாலசுப்ரமணியம், மால்வி சுந்தரேஷன், பத்மபிரியா ராகவன், அஹானா கிருஷ்ணன்- பாடகர்கள்
அருண் உமா- டப்பிங் இன்ஞ்னியர்
ராம் பிரசாத் – ஸ்டில்ஸ்
ஶ்ரீராம் -DI