அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் போன்ற புரட்சியாளர்கள் வசனங்களோடு Pasi Documentary Drama ஆரம்பிக்கிறது.
கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை பதிவு செய்து இருக்கிறது Pasi Docudrama 2020.
ஊரடங்கு காலத்தில் வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள துணை நடிகர் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் ஊடகத்துறை சமூகநீதி அரசியல் பேசும் நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான காட்சி.
ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்துக் கணிப்பு மூலம் பதிவு செய்கிறார் ஊடக நண்பர். உடன் தங்கியிருக்கும் சுயநலமிக்க நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும் கேள்வி கேட்பவரை கண்டுக்காமல் இருப்பதும் பின் இரு நண்பர்களுக்கும் ஏற்படும் முரண்பாடான உரையாடல்கள் தான் இப்படத்தின் முக்கிய அம்சம்.
மொத்தம் ஒரு மணி நேரம் 13 நிமிடங்கள் கொண்ட இந்த Pasi Enkira Desiyanooi ஆவணப்பட நாடகம் 21ம் நூற்றாண்டில் இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாட்டு மக்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளையும் வரலாற்று பதிவுகளையும் பதிவு செய்திருக்கிறது.
2022ம் ஆண்டு எழுவர் விடுதலை ஆனபோதிலும் நிகழ்காலத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், 2020 ஆம் ஆண்டு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் இருந்ததை இருந்த மாதிரி இந்த “பசி என்கிற தேசிய நோய்” ஆவணப்பட நாடகம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஊடகத்துறையினரும் சினிமா துறையினரும் வரலாற்று உண்மைகளை எடுத்துரைத்தால் அதிகாரத்தில் உள்ளவர்களும் ஆட்சியாளர்களும் உண்மையாகவே மக்களுக்காக வேலை செய்வார்கள் என்ற வசனங்கள் நிகழ்கால மக்கள் மனநிலையை எடுத்துரைத்து இருக்கிறது.
திராணி உ மணி பாடல் வரிகளில் சிறுமி மதுமிதா ராஜசேகரன் பாடிய Theenunmi பாடல் பார்க்கும் பொழுது 2020 ஆம் ஆண்டு கொரோனா கால கொடூரங்கள் கண் முன்னே வருகிறது.
V முரளி ஸ்ரீதர் ஒளிப்பதிவில், M பாசில் இசையில், M தியாகராஜன் படத்தொகுப்பில் சக்திவேல் தங்கமணி (Sakthivel Thangamani) இயக்கத்தில் ஒரு புரட்சிகரமான படைப்பு. வசனங்கள் ஒவ்வொன்றும் அனல் பறக்கிறது. இயக்குனருக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுக்கள்.
இந்த ஆவணப்பட நாடகம் ShortFundly OTT தளத்தில் ஏப்ரல் ஆறாம் தேதி, 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
தரமான வரலாற்று பதிவாக உருவாக்கப்பட்டுள்ள பசி என்கிற தேசிய நோய் ஆவணப்பட நாடகம் Pasi Documentary Drama எதிர்காலத்தில் நிறைய விருதுகள் வாங்கக்கூடிய படமாக இது நிச்சயம் இருக்கும். ஈரானிய படங்கள் வரிசையில் இந்திய தமிழ் படம்.
மொத்தத்தில் “பசி என்கிற தேசிய நோய்” என்னும் ஆவணப்பட நாடகம் ஒவ்வொரு இந்திய குடிமகனும் பார்க்க வேண்டிய படம்.