குரு இயக்கத்தில், சோனியா அகர்வால், குட்டி புலி சரவணன், திலீப், வர்ஷிதா, சுகன்யா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பருத்தி.
சோனியா அகர்வால் கணவரை இழந்து, ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு உறவினர் வீட்டில் இருந்து வருகிறார். கூலி வேலை செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபுறத்தில் அம்மா அப்பா இல்லாமல் பாட்டி அரவணைப்பில் வளரும் சிறுவன் திலீப், தன்னுடன் படிக்கும் பள்ளி தோழியான வர்ஷிட்டாவுடன் மிகவும் நட்புடனும் பாசத்துடனும் பழகி வருகிறார்.
வர்ஷிட்டாவின் நட்பும் பாசமும் மட்டுமே திலிப்ஸ்க்கு மகிழ்ச்சி தருகிறது.
சிறு வயதிலேயே சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகளையும் பிரச்சினைகளையும் பார்க்கும் திலிப்ஸ் மனதளவில் மிகவும் பாதிப்படுகிறார். ஏழையாக பிறந்ததும் இந்த ஜாதியில் பிறந்ததும் என்னுடைய தவறா என்று கேட்டு ஏங்குகிறார்.
ஒரு கட்டத்தில் சோனியா அகர்வால் தான் தன்னுடைய அம்மா என்று தெரிய வருகிறது திலீப்ஸ்க்கு. இருப்பினும் அம்மாவை வெறுக்கிறான். ஒரு கட்டத்தில் வளர்த்த பாட்டியும் இறந்து விடுகிறார். அதன் பிறகு திலீப்சின் நிலை என்னவானது? சோனியா அகர்வாலை அம்மா என்று ஏற்றுக் கொண்டானா? இல்லையா? என்பதே பருத்திப் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : A குரு
ஒளிப்பதிவு : ராஜேஷ்
இசையமைப்பாளர் : ரஞ்சித் வாசுதேவன்
கேமராமேன் : ராஜேஷ்
இசை அமைப்பாளர் : ரஞ்சித் வாசுதேவன்
எடிட்டர் : RK செல்வம்
பாடல்கள் : நலங்கிள்ளி
மக்கள் தொடர்பு : நிதீஷ் – புவன்

