பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் கே.எஸ்.சினிஷ் தயாரிப்பில், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ரமா ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளங்கோ, இளவரசு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பார்க்கிங்.
குன்றத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வேலை செய்யும் நேர்மையான உயர் அதிகாரியான எம்.எஸ்.பாஸ்கர், மனைவி மற்றும் மகளோடு 10 வருடங்களாக வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் மாடியில் இருக்கும் வீட்டில் காதல் திருமணம் செய்துக்கொண்ட ஹரிஷ் கல்யாண் மனைவி இந்துஜா புதிதாக குடி வருகிறார்கள்.
இரு குடும்பங்களும் முதலில் அன்போடு பழகுகிறார்கள். பின்னர் சில மாதங்கள் கழித்து ஹரிஷ் கல்யாண் தன் மனைவிக்காக புது கார் ஒன்றை வாங்குகிறார். அந்த காரை அவர் வீட்டில் இருக்கும் சிறிய இடத்தில் நிறுத்தி வைக்க,
எம்.எஸ்.பாஸ்கருக்கு, இரு சக்கர வாகனத்தை வெளியே எடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் சாதாரண பேச்சில் ஆரம்பிக்கும் பிரச்சனை, ஈகோ பிரச்சனையாக மாரி நினைத்து கூட பார்க்க முடியாத சம்பவங்கள் ஏற்படுகிறது.
இவர்களின் பார்க்கிங் பிரச்சினை முடிவுக்கு வந்ததா இல்லையா எப்படிப்பட்ட பிரச்சனைகளை இருவரும் சந்திக்கிறார்கள் என்பதே பார்க்கிங் படத்தோட மீதி கதை.
தொழில் நுட்ப கலைஞர்கள்
இசை : சாம் சிஎஸ்
ஒளிப்பதிவு : ஜிஜு சன்னி
எடிட்டிங் : பிலோமின் ராஜ்
கலை : என்.கே.ராகுல்
சண்டை : தினேஷ் காசி, பீனிக்ஸ் பிரபு
ஆடைகள் : ஷேர் அலி
நடன இயக்குனர் : அப்சர்
பாடல் வரிகள் : சாம் சிஎஸ், விஷ்ணு எடவன்
நிர்வாகத் தயாரிப்பாளர் : டி முருகேசன்
ஒலிக்கலவை : ராஜகிருஷ்ணன் எம்.ஆர்
ஒலி வடிவமைப்பு : சின்க் சினிமா ஸ்டில்ஸ் : ராஜேந்திரன்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்