‘பரிசு’ விமர்சனம்

கலா அல்லூரி இயக்கத்தில், ஜான்விகா, ஜெய் பாலா, சுதாகர், கிரண் பிரதீப், ஆடுகளம் நரேன், சென்ட்ராயன், மனோபாலா, சச்சு, அஞ்சலதேவி, சின்ன பொண்ணு ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பரிசு..

முன்னாள் ராணுவ வீரராக இருந்த ஆடுகளம் நரேனின் மகளாக வருகிறார் ஜான்விகா. அவர் படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டிலும் விவசாயத்திலும் கூட முதன்மை மாணவியாக இருந்து வருகிறார். 

அப்பா ராணுவ வீரராக இருந்ததால் ஜான்விக்கும் நாட்டின் மீதான பற்றும் அக்கறையும் அதிகமாகவே இருந்தது. நரேன்  தன்னுடைய மகளுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி கொடுத்து வந்தார். 

துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று வெற்றி பெற்று வரும் ஜான்விக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.

பாராட்டு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பும் வழியில் ஒரு கார் மீது லாரி வேகமாக மோதி விபத்து எடுத்து ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுகிறது. இதனைப் பார்த்து ஜான்வி அந்த காரில் இருப்பவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கிறார். 

அந்த விபத்தை ஏற்படுத்தியது யார்? அந்த நபரை காப்பாற்றிய ஜான்விக்கு என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்பட்டது? அந்த பிரச்சனைகளில் இருந்து ஜான்வி தப்பித்தாரா? இல்லையா? என்பதே பரிசு படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்பக் கலைஞர்கள் 

 எழுத்து இயக்கம் : கலா அல்லூர

ஒளிப்பதிவு : சங்கர் செல்வராஜ்

இசை : ராஜீஷ்

பின்னணி இசை : சி.வி. ஹமரா

பாடல்கள் : கே ராஜேந்திர சோழன்

படத்தொகுப்பு : சி.எஸ்.பிரேம்குமார், ராம் கோபி

நடனம் : சுரேஷ்சித்

சண்டைக் காட்சிகள் : கோட்டி – இளங்கோ

தயாரிப்பு : ஸ்ரீகலா கிரியேஷன்ஸ்.

 மக்கள் தொடர்பு : சக்தி சரவணன்