தனியார் பள்ளிக்கு எதிராக பெற்றோர் போராட்டம் – சென்னை
வளசரவாக்கத்தில் ஹோலிகிராஸ் பள்ளிக்கு எதிராக பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியை திட்டியதால் மனமுடைந்து +2 மாணவி வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலைக்கு காரணமான பள்ளியை கண்டித்து பெற்றோர், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.