சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஶ்ரீ லீலா, காளி வெங்கட், ராணா ரகுபதி, வசந்த், சேத்தன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பராசக்தி.
வடமாநிலங்களில் மக்களின் விருப்பத்திற்கு எதிராக இந்தி மொழியை திணித்தது போல தமிழ்நாட்டிலும் ஹிந்தி மொழியை திணிக்க நினைக்கிறார்கள் அவர்களுக்கு எதிராக அரசியல் தலைவர்களும் மாணவர்களும் போராடுகிறார்கள்.
சிவகார்த்திகேயன், ஹிந்தி திணிப்பிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களை சேர்த்து புறநானூற்று படை ஒரு அமைப்பை உருவாக்கி அதற்கு தலைமை தாங்கி வழி நடத்தி வருகிறார்.
அந்த அமைப்பு ரயில் எரிப்பு போராட்டத்தை நடத்தியது. அதன் பிறகு தன்னுடைய நண்பனின் இழப்பால் போராட்டத்தை எல்லாம் கைவிட்டு விட்டு ரயில்வேயில் ஒரு சாதாரண வேலை செய்யும் ஊழியராக மாறுகிறார்.
கல்லூரியில் படிக்கும் சிவகார்த்திகேயன் தம்பி அதர்வா ஹிந்தி திணிப்பிற்கு எதிராக தன்னுடைய கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவது மட்டுமல்லாமல் தீ வைத்து எரித்து விடுகிறார். அவருக்கு உதவியாக எம் பி மகளாக வரும் நாயகி ஸ்ரீலிலாவும் இருக்கிறார்.
போராட்டம் எல்லாம் செய்ய வேண்டாம் படிப்பில் மட்டும் கவனம் செலுத்து என்று தம்பி அதிர்வாவை கண்டித்து விட்டு, அரசாங்க வேலைக்கான நேர்காணலுக்கு செல்கிறார். நேர்காணலுக்கு சென்ற இடத்தில் அங்கு நடக்கும் ஒரு சம்பவம் சிவகார்த்திகேயனை மனதளவில் மிகவும் பாதிக்கிறது.
இதற்கிடையே போராட்டங்களை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி அழித்து போராட்டக்காரர்களையும் அழிப்பதற்காக மத்திய அரசால் நியமிக்கப்படும் அதிகாரியாக ஜெயம் ரவி வருகிறார்.
இந்த சமயத்தில் மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு கொள்கையால் பலவகையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் போராட்டத்தை ஆரம்பிக்கிறார்கள்.
போராட்டத்தை அடக்குவதற்காக ராணுவத்தை அழைத்து வருகிறார் ரவி மோகன்.
இறுதியில் இந்தி மொழி எதிர்ப்பிற்கான மாணவர்களின் போராட்டம் வென்றதா? இல்லையா? ரவி மோகன் புறநானூற்று படை இயக்கத்தை அழித்தாரா? இல்லையா? உணர்ச்சிபூர்வமாக சொல்லி இருக்கும் படமே பராசக்தி.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : சதா குமாரா
தயாரிப்பு : ஆகாஷ் பாஸ்கரன்
இசை : ஜு வி பிரகாஷ்
ஒளிப்பதிவு : ரவி கே சந்திரன்
படத்துக்கு : சதீஷ் சூர்யா
கலை இயக்குனர் : எஸ் அண்ணாதுரை
மக்கள் தொடர்பு : சதீஷ்(AIM)

