பரமசிவன் பாத்திமா விமர்சனம்

லக்‌ஷ்மி கிரியேஷன்ஸ் சார்பில், இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில், விமல், சாயா தேவி, எம் எஸ் பாஸ்கர், இசக்கி கார்வண்ணன், சுகுமார், கூல் சுரேஷ், அருள்தாஸ், ஸ்ரீரஞ்சனி, மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், வீரசமர், ஆறுபாலா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பரமசிவன் பாத்திமா.

திண்டுக்கல் மாவட்டத்தில் சுப்ரமணியபுரம் என்று ஒரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் இந்துக்கள் மட்டுமே வசித்து வந்துள்ளனர். நாட்கள் ஆக ஆக அங்கு உள்ளவர்களில் சிலர் கிறிஸ்தவர்களாக மதம் மாறி யோக்காபுரம் என்ற கிறிஸ்தவ கிராமத்திற்கு சென்று விடுகின்றனர்.

அப்படி சிறுவயதிலேயே அந்த ஊருக்கு நாயகி சாயாதேவியின் குடும்பம் சென்று விடுகிறது. 

இப்படி எல்லோரும் மதம் மாறி சென்று விட்டால் இந்த கிராமம் என்ன ஆவது என்று இனி இந்த கிராமத்தில் இருந்து யாரும் மதம் மாறக்கூடாது என்று கோவிலில் சத்தியம் செய்கின்றனர் அந்த ஊர் மக்கள்.

சிறு வயதில் இருந்தே அந்த ஊரில் வளர்ந்த விமலும் சாயா தேவியும் காதலிக்கின்றனர். 

யோகாபுரம் சென்றாலும் சாயாதேவி விமலின் மீதும் சுப்ரமணியபுரம் மீதும் அதே அன்புடன் இருக்கிறார். 

அந்த கிராமத்தில் திருமணம் செய்ய போகும் மணமகன்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து விடுகின்றனர்.

இந்த வழக்கை விசாரிக்க வருகிறார் காவல் ஆய்வாளரான இசக்கி கார்வண்ணன். 

அந்த கொலைகளை செய்தது யார்? விமலுக்கும் சாயாதேவிக்கும் நடந்தது என்ன? என்பதே பரமசிவன் பாத்திமா படத்தோட மீதி கதை. 

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : இசக்கி கார்வண்ணன்

ஒளிப்பதிவு : சுகுமார்

இசை : தீபன் சக்ரவர்த்தி

தயாரிப்பு : லக்‌ஷ்மி கிரியேஷன்ஸ்

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்