மும்பையில் வாழும் தனுஷ் ஜெயிலில் இருக்கும் மூன்று சிறுவர்களுக்கு தன்னை பற்றிய கதை சொல்கிறார். அப்பா இல்லாத தனுஷ் அம்மாவின் வளர்ப்பில் வளர்கிறார். பள்ளிக்கு சென்ற பிறகுதானொரு ஏழை என்றும், பணக்காரன் ஆகவேண்டும் என்ற எண்ணமும் தனுஷுக்குள் ஏற்படுகிறது. அதற்காக மேஜிக் கற்று பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்.
இதற்கிடையில் தனுஷின் அம்மா இறந்துவிட, அவருக்கு வந்திருந்த கடிதத்தை படித்துவிட்டு கடன் வாங்கி பாரிஸ் செல்கிறார். அங்கு ஒரு பெண்ணிடம் காதல் வயபடுகிறார், ஒரு கட்டத்தில் அகதியாகிறார். தனுஷ் பாரிஸ் செல்ல காரணம் என்ன? அங்கே என்ன என்ன பிரச்சனைகளை சந்தித்தார், அவருடைய மேஜிக் அவருக்கு உதவியதா? மீண்டும் மும்பை வந்தாரா? என்பதே பக்கிரி படத்தின் மீதிக்கதை.
இயல்பாக கதையோடு ஒன்றி நடித்துள்ளார் தனுஷ், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வருவது ஏதோ பக்கத்துக்கு ஊருக்கு செல்வது போல் சாதாரணமாக வருமவது லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது. படத்தில் நடித்துள்ள முக்கால்வாசி பேர் தெரியாதவர்களாவே இருந்தாலும் சிறப்பாக நடித்துள்ளனர்.
மூன்று சிறுவர்களை கதையின் மூலம் திருத்த முயற்சிக்கிறார் தனுஷ்.
பக்கிரி மேஜிக் உண்டு லாஜிக் இல்லை