சிங்கப்பூரில் வசூல் மழை பொழியும் ‘பாக்கணும் போல இருக்கு’ – மகிழ்ச்சியில் துவார் ஜி.சந்திரசேகர்!
‘வீரசேகரன்’, ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘தொட்டால் தொடரும்’, ‘இருவர் உள்ளம்’ ஆகியப் படங்களை தயாரித்த துவார் ஜி.சந்திரசேகர், தனது எப்.சி.எஸ் கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்த 5 வது படம் ‘பாக்கணும் போல இருக்கு’. பரதன் ஹீரோவாகவும், அன்சிபா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் இப்படத்தை எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியிருந்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் காமெடிக் காட்சிகள் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, முழுமையான பொழுதுபோக்கு படமாகவும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும், விமர்சன ரீதியாகவும் சிறந்த கமர்ஷியல் படமாக பாராட்டுப் பெற்றது.
தற்போது கடந்த 40 நாட்களுக்கு மேலாக புதிய திரைப்படங்கள் வெளியாகத காரணத்தினால் ஏற்கனவே வெளியான படங்களை இரண்டாவது முறையாக ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில் ‘பாக்கணும் போல இருக்கு’ படமும் சிங்கப்பூரில் கடந்த மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீஸ் ஆன முதல் நாளே சிறப்பான ஓபனிங்கோடு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இப்படம் சிங்கப்பூரில் தொடர்ந்து நான்காவது வாரமாக ஓடிக்கொண்டிருப்பதோடு, வசூலில் சாதனையும் படைத்து வருகிறது.
சிங்கப்பூரில் உள்ள பிரபல திரையரங்கமான ரெக்ஸ் உள்ளிட்ட பல முக்கிய திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
கஞ்சா கருப்பு, சூரி, சிங்கப்பூர் துரைராஜ் ஆகியோரது காமெடிக் காட்சிகள் படத்திற்கு ஹைலைட்டாக அமைந்தது போல, பாடல் காட்சிகளும் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்திருக்கிறது. இப்படத்திற்கு சிங்கப்பூரில் கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சியடைந்திருக்கும் தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர், தமிழகத்திலும் இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்.
’பாக்கணும் போல இருக்கு’ படத்தில் எப்படி காமெடி, பாடல், காதல் காட்சிகள் பாராட்டுப் பெற்றதோ அதேபோல், படத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி காட்சியும் பாராட்டுப் பெற்றது. நிஜமான ஜல்லிக்கட்டு போட்டியை படமாக்கிய விதம் இப்படத்தின் சிறப்பு அம்சமாகும். இப்படம் முதல் முறையாக வெளியான போது, துவார் ஜி.சந்திரசேகர், தனது சொந்த கிராமத்தின் கோவில் திருவிழாவுக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டு சிறப்பாக நடத்திக் கொடுத்தார். தற்போது இரண்டாவது முறையாக ரிலீஸ் செய்யப்பட்டு, படம் வெற்றிப் பெற்றிருப்பதால், இந்த வருடமும் தனது சொந்த ஊரில் உள்ள கோவில் திருவிழாவில், தனது சொந்த செலவில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடிவு செய்திருக்கிறார்.
மேலும், 6 வது திரைப்படத்தை பெரிய பொருட்ச் செலவில் தயாரித்துள்ள துவார் ஜி.சந்திரசேகர், அதற்கான பணிகளில் பிஸியாக இருக்கிறார். சினிமா வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இப்படம் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.