சஞ்சய் லிலா பான்சாலியின் பத்மாவதி திரைப்படம் பிரச்சனைகளை சந்தித்த பிறகு ரிலிசாகியுள்ளது. படத்தின் கதை 13 ஆம் நூற்றாண்டில் ஆறம்பிக்கிறது. விருந்தினராக சிலோனுக்கு வரும் சித்தோன் ராஜ்ஜியத்தின் ரத்தன் சிங், மான்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் பத்மாவதியின் அம்பு பட்டு காயமடைகிறான். பதமாவதியின் அழகில் மயங்கி, காதல் வயபட்டு மணமுடித்து இளைய அரசியாக நாட்டிற்கு அழைத்து வருகிறான்.
இந்நிலையில் மற்றொருபுரம் மண் மீதும், பெண் மீதும் ஆசை கொண்ட அலாவுதின் பல சதி செயல்களுடன் கொலையும் செய்து கில்ஜி ராஜ்ஜியத்தின் சுல்தான் ஆகிறான். சித்தோட் ராஜ்ஜியத்தில் செய்த குற்றத்திற்கு தண்டனையாக நாடு கடத்தப்பட்ட குரு, அவர்களை அழிக்க விரும்பி பத்மாவதியின் அழகை கூறி நாட்டையும், ராணியையும் கைப்பற்ற அலாவுதினுக்கு போதனை செய்கிறான்.
அலாவுதினும் அவன் பேச்சைக் கேட்டு ரத்தன் சிங்கிற்கு நட்பு பாராட்ட தகவல் அனுப்புகிறான். அதனை ஏற்க ரத்தன் சிங் மறுப்பதால் தனது படைகளை திரட்டி போர் தொடுக்க சீத்தோட் செல்கிறான் அலாவுதின். இரு ராஜ்ஜியத்திற்கு இடையே போர் உண்டாகும் சூழல் ஏற்படுகிறது. இப்போரில் என்ன நடந்தது? யார் வென்றார்கள்? அலாவுதின் ஆசை நிறைவேறியதா? பத்மாவதி காப்பற்றப்பட்டாளா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ரத்தன் சிங் ஆக ஷாகித் கபூரும், பத்மாவதியாக தீபிகா படுகோன், அலாவுதீனாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர் .
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்