படையாண்ட மாவீரா விமர்சனம்

வி கே ப்ரடெக்ஷன்ஸ் தயாரிப்பில், வ கெளதமன் இயக்கத்தில், கௌதமன், சமுத்திரக்கனி, மன்சூர் அலிகான், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், பூஜிதா, மதுசூதன் ராவ், நிழல்கள் ரவி, பிரபாகர் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் படையாண்ட மாவீரா.

காடுவெட்டி குருவாக வ.கௌதமன் நடித்திருக்கிறார், பட்டியலின மக்களுக்காக குரல் கொடுத்ததற்காக குருவின் அப்பாவான சமுத்திரக்கனி ஆடுகளும் நரேனால் கொல்லப்படுகிறார்.  ஆடுகளம் நரேனை கொன்று விட வேண்டும் என்ற எண்ணத்துடனே வளரும் கௌதமன் ஒரு கட்டத்தில் அவரை கொன்று விடுகிறார். 

அதன் பிறகு வளர்ந்து பெரிய ஆளான பிறகு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு எதிராக அதனை செய்தவர்களை கொலை செய்து விடுகிறார். 

அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து விஷயங்களிலிருந்தும் காப்பாற்றி அவர்களுக்கு நற்செயல்களை செய்து வருகிறார். 

நிலத்தை சுரண்டும் தொழிலதிபர்களுக்கு எதிராகவும், மக்களுக்கு ஆதரவாகவும், இருந்து வருகிறார். 

ஒரு கட்டத்தில் கெளதமனை கொலை செய்வதற்காக திட்டமிடுகிறார்கள். அவர்களின் சதி திட்டத்தால் கவுதம் கொலை செய்யப்பட்டாரா? இல்லையா? மக்களுக்கு என்னவெல்லாம் நல்லது செய்தார்? என்பதே படையாண்ட மாவீரா படத்தோட மீதிக்கதை.

 தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : வ கௌதமன் 

இசை : ஜிவி பிரகாஷ் குமார் 

ஒளிப்பதிவு : கோபி ஜகதீஸ்வரன் 

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்