படைத்தலைவன் விமர்சனம்

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில், ஜெகநாதன் பரமசிவம் தயாரிப்பில், அன்பு இயக்கத்தில், சண்முக பாண்டியன் விஜயகாந்த், கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், முனிஷ்காந்த், கருடன் ராம், ரிஷி, ஏ.வெங்கடேஷ், யுகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள் தாஸ், லோகு என்பிகேஎஸ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் படைத்தலைவன். 

பொள்ளாச்சி பக்கத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில், பானைகள் செய்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் கஸ்தூரிராஜா அவருக்கு மகனாக சண்முக பாண்டியன் இருக்கிறார், அவருக்கு தங்கையும் இருக்கிறார். 

அவர்கள் சிறுவயதில் இருந்தே 25 வருடங்களாக ஒரு யானையை மணியன் என்று பெயரிட்டு உடன்பிறந்த சகோதரன் போல வளர்த்து வருகிறார்கள். 

ஒரு சூழ்நிலையில் உறவினர் லோகு என்பவர் கஸ்தூரிராஜா வாங்கிய கடனை கொடுக்காததால் அவரை அவமானப்படுத்துகிறார். அதனால் அந்த கடனை திருப்பி அடைப்பதற்காக யானை மணியனை வைத்து ஏதேனும் சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்கிறார் சண்முக பாண்டியன். அதற்கு அப்பா கஸ்தூரி ராஜா  சம்மதிக்கவில்லை பிறகு சம்மதிக்கிறார்.

ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக யானையை அழைத்துச் செல்கிறார்கள். அங்கு கடன் கொடுத்த லோகு செய்த சூழ்ச்சியால் யானைக்கு மதம் பிடித்து விடுகிறது.

அதனால் கோர்ட்டு உத்தரவுப்படி யானையை முகாமுக்கு அனுப்பி விடுகிறார்கள். 

அந்த யானையை முகாமில் இருந்து அழைத்து வர பல அவமானங்கள் பட்டு, முயற்சிகள் எடுத்து அந்த யானையை அழைத்து வர செல்கிறார்கள் சண்முக பாண்டியன் கஸ்தூரிராஜாவும். 

ஆனால் அங்கு யானை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர் அதிகாரியிடம் கேட்டால் யானை இங்கு இருந்து காட்டுக்குள் சென்று விட்டது என்று பொறுப்பில்லாமல் கூறுகிறார்.

இதனால் யானையை தேடும் முயற்சியில் சண்முக பாண்டியன் ஈடுபட யானை ஒடிசாவில் இருப்பது தெரிய வருகிறது.

ஒடிசாவில் யாரிடம் அந்த யானை சிக்கிக்கொண்டது? ஒடிசாவுக்கு சென்று யானையை கண்டுபிடித்து திரும்பி அழைத்து வந்தாரா? இல்லையா? என்பதே‌ படைத்தலைவன் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இசை : இளையராஜா

வசனம் மற்றும் திரைக்கதை : பார்த்திபன் தேசிங்கு

கலை இயக்குனர் : பி. ராஜு, சண்முகம் சண்டைக்காட்சி : மகேஷ் மேத்யூ

தயாரிப்பு நிர்வாகி : வி.முத்துகுமார்

விஷுவல் எஃபெக்ட்ஸ் : சுனில்

ஒளிப்பதிவு : எஸ்.ஆர்.சதீஷ் குமார்

எடிட்டிங் : எஸ்.பி.அஹமது

ஒலி வடிவமைப்பு : ஏ.சதீஷ் குமார்

மிக்சிங் : ஆனந்த் ராமச்சந்திரன், கே.ஜெகன் ஆடை வடிவமைப்பு : என்.லோகநாதன் ஸ்டில்ஸ் : சக்தி பிரியன்

மக்கள் தொடர​;பு : சதீஷ் (ஏய்ம்)