இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியிலிருந்து முழுவதும் நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க 750 செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 2,300 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. செயற்குழு , பொதுக்குழு உறுப்பினர்கள் வர தொடங்கினர்கள். பொதுக்கூழுவிற்கு 95 சதவீதம் உறுப்பினர்கள் வருகைதந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை வானகரத்தில் நடைபெறவுள்ள பொதுக்குழுவில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்து உள்ளனர்.செயற்குழு கூட்டம் தொடங்கியது.அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.. பொதுக்குழுவில் 2148 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளார்கள் என தகவல் வெளியாகி உள்ளது பொதுக் குழு கூட்டத்தில் பா. வளர்மதி ஆவேசமாக பேசினார் அவர் பேசியதாவது:-ஆட்சியை கலைப்போம் என சொல்பவர்கள் ஜெயலலிதாவை என்ன பாடு படுத்தி இருப்பார்கள்? ஜெயலலிதாவின் ஆட்சியை விரட்டுவோம் என மிரட்டுபவர்கள் அவருக்கு துரோகம் செய்தவர்கள்.பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு கட்சியை மீட்பார்கள். “2வது முறையாக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இல்லாத பொதுக்குழுவை நடத்தி கொண்டிருக்கிறோம்” என பேசினார்.