JSB பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் “அசுரகுரு”
விக்ரம் பிரபு சிறப்பான ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார் இவர்களுடன் பாகுபலி சுப்பாராஜ், யோகிபாபு, நாகிநீடு, ஜெகன், குமரவேல், மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அண்மையில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தின் டீசரை வெளியிட்டார். அசுரகுரு படத்தின் டீசரை பார்த்த ஏ.ஆர். ரஹ்மான் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். அசுரகுரு படக்குழுவினர் மிகுந்த மாகிழ்சியில் உள்ளனர்.
சென்னை, உடுமலைப்பேட்டை, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள “அசுரகுரு” விரைவில் திரைக்கு வரவுள்ளது
இயக்கம் – ஏ. ராஜ்தீப் ,இசை – கணேஷ் ராகவேந்திரா, ஒளிப்பதிவு – விசாரணை ராமலிங்கம், வசனம் – கபிலன் வைரமுத்து, சந்துரு மாணிக்கவாசகம், பாடல்கள் – கபிலன் வைரமுத்து, பழநிபாரதி