கேரளாவின் திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் நேரடியாக பதிவு செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம் என்று ஆஸ்கார் விருது பெற்றவுடன் சவுண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி கூறுகிறார்
அவர் ரசூல் பூக்குட்டி ஆசைபட்டது போலவே நண்பர் மூலமாக பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அதற்கான வேலைகளில் ஈடுபடும் போது, ரசூல் பூக்குட்டிக்கும், நண்பருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. பிரச்சனையால் அந்த வேலை கைவிடப்படுகிறது.
மீண்டும் அதனை தானே எடுத்து முடிக்க முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபடுகிறார் ரசூல். இதனால் ரசூல் பூக்குட்டிக்கு பல்வேறு வழிகளில் பிரச்சனைகள் வருகிறது. அந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்தாரா? இல்லையா? என்பதே ஒரு கதை சொல்லட்டுமா படத்தின் மீதிக்கதை.
ரசூல் பூக்குட்டி நாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கேரளாவின் திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற பூரம் திருவிழாவை கண்முன் நிறுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
ஆக மொத்தம் ஒரு கதை சொல்லட்டுமா ஒலி பிரியர்களுக்கான வரம்