தன்னோட சொந்த நிலத்தில் விவசாயம் இல்லாமல் முன்னாடி விவசாயத்திற்காக தன் அப்பா வாங்கிய கடனுக்கான வட்டி ஒரு பக்கம் அதிகரிக்கும் நிலையில் நிரந்தரமான வேலை இல்லாமல் தன்னோட தாய் கோவை சரளா மற்றும் தங்கை ஆரா ஆகியோருடன் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார் நாயகன் பிரபஞ்சன்.
தன் அப்பா வாங்கிய கடனுக்கான வட்டி ஒரு பக்கம் அதிகரிக்க மறுபக்கம் நிரந்தரமான வேலை கிடைக்காமல் தனக்கு கிடைத்த வேலையை செய்து வருகிறார் நாயகன் பிரபஞ்சன்.
இந்த சமயத்தில் ஊரில் கஷ்டப்படுபவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் சார்லஸ் வினோத், கடனை திருப்பி கொடுக்க முடியாத குடும்பத்தில் இருக்கும் பெண்களை தனது ஆசைக்கு இனங்க வற்புறுத்துகிறார்.
வட்டிக்கு பணம் கொடுக்கும் சார்லஸ் வினோத்தால் கிராமத்தில் உள்ள பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நாயகனின் பிரபஞசனுடைய தங்கை மீதும் சார்லஸ் வினோத் கண் படுகிறது.
நாயகன் பிரபஞ்சன் தாய் கோவை சரளாவிடம் சொன்ன தேதியில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வில்லை என்றால் உங்களுடைய மகளை மல்லிகைப்பூ வைத்து தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும், என்று அடாவடி செய்கிறார் சார்லஸ் வினோத்.
வாங்கிய கடனை அடைப்பதற்காக நாயகன் பிரபஞ்சன் வெளிநாட்டுக்கு வேலைக்கு போக முடிவு செய்கிறார்.
அதற்காக தன் அப்பாவின் நினைவாக வைத்திருந்த தாலியை அம்மா கோவை சரளா விற்று நாயகன் பிரபஞ்சனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைக்கிறார்.
வெளிநாட்டுக்கு வேலைக்கு போக வேண்டிய நாயகன் பிரபஞ்சன், எதிர்பாராத சில பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வதால் வெளிநாட்டுக்கு போக முடியாமல் மும்பையில் சிக்கிக்கொள்ள அதே சமயம் கையில் வைத்திருந்த பணத்தை இழந்துவிட்டதால் சொந்த ஊருக்கும் போக முடியாமல் தவிக்கிறார் நாயகன் பிரபஞ்சன்.
இந்த நிலையில், கதாநாயகன் பிரபஞ்சனுக்கு பணம் சம்பாதிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கிறது.
பணக்காரர்களால் அப்பாவிகளின் உயிரை வைத்து துப்பாக்கியால் சுட்டு விளையாடப்படும் சூதாட்டமான அந்த போட்டியில் கலந்துக்கொள்பவர்களின் உயிருக்கு ஆபத்து அதிகம் என்றாலும், அந்த விளையாட்டில் கலந்துக்கொள்ள கதாநாயகன் பிரபஞ்சன் முடிவு செய்கிறார்.
அதே சமயம், அந்த விளையாட்டை தடுக்க இண்டர்போல் போலீஸ் முயற்சியில் இறங்குகிறது.
கடைசியில் நாயகன் பிரபஞ்சன் அந்த போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்றாரா? இல்லையா?
அல்லது உயிரை விட்டாரா?, அந்த விளையாட்டு போட்டி என்ன? அதனை இண்டர்போல் போலீஸ் ஏன் தடுக்க நினைக்கிறது? என்பதுதான் இநத ஒன் வே திரைப்படத்தின் மீதிக்கதை.
நடிகை-நடிகர்கள்:
பிரபஞ்சன், கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் மற்றும் பலர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
தயாரிப்பு : ஜி குரூப் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் : எம்.எஸ்..சக்திவேல்
இசை : அஸ்வின் ஹேமந்த்
படத்தொகுப்பு : சரண் சண்முகம்
ஒளிப்பதிவு : முத்துக்குமரன்
மக்கள் தொடர்பு : சரவணன் & ஹஸ்வத்