கோவில்பட்டி அருகேயுள்ள வடக்கு திட்டங்குளத்தினை சேர்ந்தவர் ஆறுமுகப்பாண்டி(35) கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் நெல்லை மாவட்டம் தலைவன்கோட்டையை சேர்ந்த கருத்தப்பாண்டி என்பவரது மகள் கோட்டத்தாய்க்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சூர்யா,கார்த்திக் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஆறுமுகப்பாண்டியனுக்கும், கோட்டத்தாய்க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் புளியங்குடி காவல் நிலையத்தில் கருத்தப்பாண்டி தனது மருமகன் பணம் கேட்டுமிரட்டியதாக புகார் கொடுத்தாக தெரிகிறது. இதனை தொடர்ந்து போலீசார் ஆறுமுகப்பாண்டியை கைது செய்ததாக தெரிகிறது. இந்த வழக்கில் ஜாமீன் பெற்று வந்த ஆறுமுகப்பாண்டி, தன்மீது போலீசார் பொய் வழக்கு போட்டு சித்திரவதைப்படுத்தியதாகவும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவில்பட்டி டி.எஸ்.பி.அலுவலகம் அருகேயுள்ள 200 அடி உயரமுள்ள காவல்துறை வயர்லெஸ் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்விடுத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து டி.எஸ்.பி.முருகவேல், ஆய்வாளர் ராஜேஸ், அகில இந்திய தேவரின மக்கள் கூட்டடைமப்பு நிறுவன தலைவர் அண்ணாத்துரை, ஆறுமுகப்பாண்டி தாய் மற்றும் உறவினர்கள், தீயணைப்புத்துறையினர் ஆறுமுகப்பாண்டியுடன் பேச்சு வார்த்தை நடத்தி கீழே இறங்க வைத்தனர். பிரச்சினைகள் இருந்தால் முறைப்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும், இது போன்று செயல்களில் ஈடுபடக்கூடாது என்று ஆறுமுகப்பாண்டியனை போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.