சுகவனம் இயக்கத்தில், “பரோட்டா” முருகேசன், கார்த்திகேசன், சித்ரா நடராஜன், முருகன், சேனாபதி, விஜயன், விகடன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவர உள்ள படம் ஒண்டிமுனியும் நல்ல பாடனும்.
பரோட்டா முருகேசன், தன்னுடைய மகன் விஜயன் சிறுவயதில் கிணற்றில் விழுந்து விட, அவனை காப்பாற்ற காவல் தெய்வமாக இருக்கும் ஒண்டிமுனிக்கு கிடாய் பலி கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார்.
வருடங்கள் பல கடக்க கிடாவும், மகனும் வளர்ந்து நிற்க, கிடாயை ஒண்டிமுனிக்கு காணிக்கையாக்கும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போகிறது. அதற்கு காரணம், அந்த ஊரில் இருக்கும் இரண்டு பன்னாடிகள்தான்.
அவர்களுக்கு இடையே இருக்கும் பிரச்சனையால், கோவில் வழிபாட்டை நிறுத்தி வைத்துள்ளனர்.
அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி கோவில் வழிபாட்டை நடத்த பரோட்டா முருகேசன் பல்வேறு முயற்சிகள் செய்கிறார். ஆனால் எதுவும் நடந்தபாடில்லை.
இப்படி இருக்கும் சூழ்நிலையில், பரோட்டா முருகேசனின் மகள் சித்ரா திருமணத்தில் பேசிய நகையை போடாததால் மாமியார் வீட்டில் இருந்து அனுப்பி விடுகின்றனர். அந்த கிடாயை விற்று பணத்தை கேட்கிறார் மறுமகன் விஜய் சேனாதிபதி.
அவரது மகன் ஒருபுறம் தன்னுடைய காதலுக்காக மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு கிடாயை விற்க முடிவு செய்கிறார்.
இதையெல்லாம் தாண்டி, கிடாயை பலி கொடுத்து தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றினாறா? இல்லையா? என்பதே ’ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பாளர் – கே.கருப்பசாமி
இணை தயாரிப்பாளர் – அமராவதி
எழுத்து & இயக்கம் – சுகவனம்
டிஓபி – விமல்
பின்னணி இசை – என்டிஆர் (நடராஜன் சங்கரன்)
எடிட்டர் – சதீஷ் குரோசாவ்
கலை – ஜே.கே.அன்டனாய்
ஸ்டண்ட் – மாஸ் மோகன்
ஒலி வடிவமைப்பு – ஹரி பிரசாத்
பிஆர்ஓ – நிகில் முருகன்

