ஓம் வெள்ளிமலை விமர்சனம்

நடிகர் நடிகைகள் :

சூப்பர் குட் சுப்ரமணியன், வீர சுபாஷ், அஞ்சு கிருஷ்ணா, கிரிராஜ், விஜயகுமார், சார்லஸ் பாண்டியன், கவிராஜ், பழனிச்சாமி மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

தயாரிப்பு – ராஜகோபால் இளங்கோவன்
இயக்கம் – ஓம் விஜய்
ஒளிப்பதிவு – மணிபெருமாள்
எடிட்டர்- சதீஷ் சூர்யா
இசை – என்.ஆர். ரகுநந்தன்
கலை இயக்குனர் – மாயபாண்டியன்
பாடல்கள் – கார்த்திக், கருமத்தூர் மணிமாறன்
லைன் பிரொடியூசர் – விக்னேஷ்
ஒலி – ராம்ஜி
ஸ்டில்ஸ் – மனோகரன்
மக்கள் தொடர்பு – சுரேஷ்சந்திர, ரேகா டிஒன்.

கீழ்வெள்ளிமலை கிராமத்தில் சித்த வைத்தியர் அகத்தீசன் (சூப்பர் குட் பிலிம்ஸ் சுப்ரமணியன்) அவரது மகள் மனோன்மணியுடன் (அஞ்சு கிருஷ்ணா) வாழ்ந்து வருகிறார். அகத்தீசன் சிறு வயதில் சித்த வைத்தியம் செய்த ஒருத்தர் இறந்து விட, அந்த கிராமமே சித்த வைத்தியர் குடும்பத்தை தள்ளி வைத்து வைத்தியம் உங்களிடம் பார்க்க மாட்டோம் என்று சொல்லி விடுகின்றனர்.
என்றாவது ஒரு நாள் ஊர் மக்கள் திருந்தி தன்னிடம் சித்த வைத்தியம் பார்க்க வருவார்கள் என்று நம்பி அந்த ஊரீலேயே வாழ்ந்து வருகிறார் அகத்தீசன்.

சித்த வைத்தியரை கிண்டல் செய்வது வாடிக்கையாகி விட அதனால் மனது கஷ்டபட்டாலும், அந்த ஊரை விட்டு போகாமல் வாழ்ந்து வருகிறார் அகத்தீசன். நகரத்திலிருந்து கிராமத்திற்கு வரும் ஒருவன் அரிப்பு நோயை பரப்பி விட, கிராமமே அந்த நோயால் அவதிப்படுகிறது. தீவிரமாக நோய் பரவினாலும், யாரும் சித்த வைத்தியர் அகத்தீசனிடம் செல்லாமல் இருக்கின்றனர். நோயை பரப்பிய நகரத்து இளைஞன் அகத்தீசனிடம் தைரியமாக வைத்தியம் பார்க்க வர, சிகிச்சை ஆரம்பமாகிறது. சில நாட்கள் மூலிகை வைத்தியம் செய்தும் குணமாகாமல் இருப்பதை அறிந்து அகத்தீசன் கவலையடைந்து, சித்தர்களை வேண்டுகிறார். திடீரென்று மறுநாள் அந்த இளைஞன் குணமடைய, கிராமமே திரண்டு வந்து அகத்தீசனிடம் வைத்தியம் செய்யுமாறு வேண்டுகின்றனர். அகத்தீசனோ இதற்கான மருந்து மேல்வெள்ளிமலையில் இருக்கிறது, அங்கே போய்தான் மூலிகைளை எடுத்து வர வேண்டும் என்று சொல்கிறார், கிராம மக்கள் சிலபேருடனும், மகளுடனும் மேல்வெள்ளிமலைக்கு செல்கிறார். அங்கே சென்றவுடன் மூலிகை எல்லாம் கிடையாது, தன் அண்ணன் போகனை கண்டு பிடித்தால் தான் மூலிகை கிடைக்கும் என்று தெரிவிக்க, அதிர்ச்சியாகின்றனர் கிராமத்து மக்கள்.
அவரை தேடி கண்டுபிடித்தார்களா?
அகத்தீசனின் அண்ணன் யார்? யாரும் அறியாமல் மலையில் வசிக்க காரணம் என்ன? நோயை குணப்படுத்தினார்களா? கடைசியில் அகத்தீசனின் சித்த வைத்திய சிகிச்சையை கிராமத்து மக்கள் ஏற்றுக்கொண்டனரா? என்பதே வெள்ளிமலை படத்தின் மீதீக்கதை.