”ஓஹோ எந்தன் பேபி” விமர்சனம்

கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில், ருத்ரா, விஷ்ணு விஷால், மிதிலா, மிஷ்கின், கருணாகரன், நிர்மல் பிள்ளை, ரெடின் கிங்க்ஸ்லி, இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ”ஓஹோ எந்தன் பேபி”.

உதவி இயக்குனராக இருக்கும் நாயகன் ருத்ரா படத்தில் நடிகராகவே நடித்திருக்கும் விஷ்ணு விஷால் இடம் கதை சொல்ல செல்கிறார். ருத்ரா இரண்டு கதைகள் சொல்ல விஷ்ணு விஷாலுக்கு பிடிக்காமல் போகிறது அதனால் நல்ல ஒரு கதையை சொல்லுமாறு அனுப்பி விடுகிறார். 

வெளியில் சென்று ருத்ரா தன்னுடைய சொந்தக் கதையையே சொன்னால் என்ன என்று நினைத்து விஷ்ணு விஷாலிடம் மீண்டும் கதை சொல்ல வருகிறார்.

தன்னுடைய காதல் கதையை கதையாக சொல்ல ஆரம்பிக்கிறார் ருத்ரா அந்த கதை

விஷ்ணு விஷாலுக்கு பிடித்து‌ விட, இரண்டாம் பாதியை சொல்ல சொல்கிறார். ருத்ரா ஓ இது முதல் பாதி இல்லை இதுதான் படத்தினுடைய கிளைமேக்ஸ் என்று சொல்கிறார். ஆனால் விஷ்ணு விஷாலோ இல்லை இது முடிவாக இருக்கக் கூடாது அதன் பிறகு நடந்தது என்ன என்று கேட்கிறார். ஆனால் ருத்ராவோ இது படத்திற்காக எழுதிய கதை அல்ல என்னுடைய வாழ்க்கையில் நடந்த கதை தான் என்று சொல்கிறார்.

இரண்டாம் பாதியில் இருந்தால்தான் நான் படத்தை பண்ணுவேன் என்ற சொல்கிறார் விஷ்ணு விஷால். அதனால் காதலியை மீண்டும் சந்திக்குமாறு ருத்ராவிடம் சொல்கிறார்.

விஷ்ணு விஷால் சொன்னதற்காகவும், தன் பட வாய்ப்புக்காகவும் மீண்டும் தன்னுடைய காதலியை ருத்ரா சந்தித்தாரா? இல்லையா? அவர்களின் காதல் மீண்டும் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பதே “ஓஹோ எந்தன் பேபி” படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

ஒளிப்பதிவு : ஹரீஷ் கண்ணன்

இசை : ஜென் மார்டீன்

படத்தொகுப்பு‌: ப்ரானவ்

கலை இயக்குனர் : ராஜேஷ்

ஸ்டண்ட் : ராம்குமார் 

ஆடை வடிவமைப்பாளர் : ருச்சி

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்