விஜய் ரங்கநாதன் இயக்கத்தில், நிவேதிதா சதீஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா, சந்திரமௌலி, கீதா கைலாசம் ஆகியோர் நடிப்பில் வெளிவர படம் ஓ பட்டர்பிளை.
படத்தின் முதல் காட்சியில் அதுல் இறந்து விடுவது போல் காட்டப்படுகிறார். இறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு கதையானது செல்கிறது.
நாயகன் (அர்ஜுன்);அதுலுக்கும், நாயகி (கௌரி) நிவேதிதா சதீஷ்க்கும் அவர்களுடைய பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
இந்த சமயத்தில் வேலையை இழந்து இருக்கும் அர்ஜுன் மனச்சோர்வில் இருக்கிறார். இதனால் இருவரும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவதற்காக கொடைக்கானலுக்கு செல்கின்றனர்.
கொடைக்கானலில் இருக்கும் கௌரியின் அப்பாவின் கெஸ்ட் ஹவுஸில் நாசர் வேலை பார்க்கிறார் அவர் வண்ணத்துப்பூச்சி வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.
கௌரி தனக்கு எக்ஸ் காதல் ஒன்று இருந்தது என்பதை அர்ஜுனிடம் சொல்ல நினைக்கிறார். ஒரு நாள் தன்னுடைய நண்பர் என்று சொல்லி (சூர்யா) சிபிச்சந்திரனை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வருகிறார் அர்ஜுன்.
சூர்யாவை பார்த்ததும் கௌரி அதிர்ச்சி அடைகிறார். அதற்கு காரணம் அந்த சூர்யா தான் கௌரியின் முன்னாள் காதலர்.
சூர்யா சிறிய நிறுவனங்களுக்கு முதலீடுகள் கொடுத்து உதவும் தொழில் செய்து வருகிறார். அர்ஜுன் தான் நிறுவனம் தொடங்குவதற்காக முதலீடு தேவைப்படுவதால் சூர்யாவை அதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திட்டம் போடுகிறார் அர்ஜுன்.
இதில் எப்படி அர்ஜுன் இறந்தார்? கௌரி சூர்யா காதல் என்னவானது? இதற்கிடையில் ஜோசியம் பலித்தது எப்படி? என்பதே ஒ பட்டர்பிளை படத்தோட மீதி கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : விஜய் ரங்கநாதன்
தயாரிப்பாளர்கள் : வெங்கி, ஆனந்த் ஷா, விஜய் ரங்கநாதன், நிஷா பாட்டியல்
தயாரிப்பு நிறுவனம் : ஆன்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ்
ஒளிப்பதிவு : வேதராமன் சங்கரன்
இசை : வைசாக் சோமநாத்
படத்தொகுப்பு : புவனேஷ் மணிவண்ணன் மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது

