இக்கோயிலின் மிகவும் பிரசித்திப் பெற்ற திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா, அக். 20ஆம் தேதி தொடங்கி, அக். 26ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியுடன் நிறைவுபெறுகிறது.
விழாவை முன்னிட்டு தொடக்க நாளான அக். 20ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 6 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெறுகின்றன.
2ஆம் திருநாள்முதல் 5ஆம் நாள் வரை கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன.
அக். 25ஆம் தேதி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு கோயில் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி ஆகியன நடைபெறுகின்றன.
அக். 26ஆம் தேதி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று, அதிகாலை 5 மணிக்கு அம்பாள் தவசுக் காட்சிக்கு புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி, இரவு திருக்கல்யாண வைபவம் ஆகியன நடைபெறுகின்றன.