கர்நாடாக மாநில அதிமுக செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி இன்று மதுரை வந்தவர், செய்தியாளர்களிடம் பேசினார் ”ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய அமைச்சர் , எங்களுக்கு மோடி இருக்கிறார் என்று சொன்னால் என்ன அர்த்தம்? இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு குறுக்கு வழியில் முயற்சிக்கிறார்களா? இவர்களுக்கு உதவுவதுதான் பிரதமர் மோடிக்கு வேலையா? அவர் நாட்டு மக்களுக்கு பணியாற்றவில்லையா? இரட்டை இலையை முடக்க நாங்கள்தான் காரணம் என்று மனோஜ்பாண்டியன் சொல்வது பொய்யான குற்றச்சாட்டு.
இரட்டை இலை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறோம். இரட்டை இலை சின்னம் வரலாற்று சின்னம், அந்த சின்னத்தை முடக்கியது ஓபிஎஸ்ஸே. டெல்லியில் இந்த கட்சியை அடகு வைக்க ஏற்பாடுகளை செய்து வருகிறார். இனிமேல் திரைப்படங்கள் வெளிவர ஒரு சீல் போதாது, பி.ஜே.பி.யின் சீலும் வைக்க வேண்டும் என நினைக்கிறேன். ஜி.எஸ்.டி பற்றி மெர்சல் திரைப்படத்தில் வந்தது உன்மையே. ஆனால், ஹச்.ராஜா செய்தது தான் தவறு. திருட்டுத்தனமாக வலைதளத்தில் படம் பார்த்தேன் என்று சொல்வது எவ்வளவு அநாகரீகம்.
அதிமுகவில் 37 நாடளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 50 எம்பிக்கள் உள்ளோம். ஆனால் நீட் தேர்விற்கு எதிராக போராடி நாடாளுமன்றத்தை முடக்கவில்லையே. இனி இவர்களை நம்பிப் பயனில்லை. டெங்கு கொசு, சுகாரத்துறை அமைச்சரை கடித்தல்தான் அதன் விளைவை உணர்வார். நாட்டை கொள்ளையடிக்கும் அரசு எடப்பாடி அரசு. இதுதான் உண்மை நிலை. ஓ.பி.எஸ்.க்கு முக்கியத்துவம் கிடையாது. இதனால் விரைவில் பி.ஜே.பி.யில் இணைவார்’’ என்றார்.