ஓ.பன்னீர்செல்வம், பிரதமருடன் ஆலோசித்தது குறித்து விளக்கம்

முன்னாள் முதல்வரும், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், தமிழக அரசியல் சூழல் குறித்தும் தமிழக அரசின் நிலைப்பாடுகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியுடன் விரிவாக ஆலோசித்தோம். அணிகள் இணைப்பு குறித்து ஆலோசித்தோம் என நீங்கள் யூகம் செய்தால் செய்துகொள்ளுங்கள்.

அதிமுக, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு உண்மையாக இருக்கும் விசுவாசிகளின் கைகளில்தான் இருக்கும். எந்த முடிவு எடுத்தாலும் அது தமிழக மக்களின் நன்மை கருதியே எடுக்கப்படும். தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் முடிவையே நாங்கள் எடுப்போம் என்று தெரிவித்தார்.