வேலூர் அடுத்த பொய்கை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சிவலிங்கம், இவரது மகன் ஜெய்கணஷே(28), இவர் காட்பாடி சித்தூர் பள் நிறுத்தம் அருகே நர்சரி கார்டன்(செடிகள் விற்பனை) வைத்துள்ளார்.
இவருடைய நர்சரி கார்டனை தொடர்பு கொண்டு ஒருவர் பேசியுள்ளார், அதில் அவர் , நான் கசம் அருகே உள்ள தனியார் தோல் நிறுவன உரிமையாளர் பேசுகிறேன், எங்கள் கம்பெனிக்கு சில நாட்களில் வெளிநாட்டில் இருந்து தொழிலதிபர்கள் வருகிறார்கள், அதறகாக , கம்பெனியை அழகுப்படுத்த கார்டன் அமைக்க வேண்டும் என்று ஜெய்கணேஷிடம் தெரிவித்துள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய ஜெய்கணேஷ், நல்ல ஆர்டர் வந்துள்ளதாக நினைத்து அவர்கள் கூறிய இடத்துக்கு சென்றார், ராணிப்பேட்டை – திருவலம் இடைக்கப்பட்ட இடத்தில் 6 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தனர், தமக்கு ஆர்டர் கொடுத்தவர்கள் அவர்கள்தான் என்று நினைத்து ஜெய்கணேஷ் பேசியுள்ளார்.
அதன்பின்னர்தான், காட்பாடி போலீசாரால் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி அலெக்ஸ் மற்றும் அவனது கூட்டாளிகள் என்று தெரியவந்தது, அலெக்ஸ் தன் கூட்டாளிகளிடம் சேர்ந்து ஜெய்கணேஷ்யிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார், ஆனாலும் பணம் தர ஜெய்கணேஷ் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் ஜெய்கணேஷ தாக்கியுள்ளனர், அவரது அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்தனர், இதைக் கண்டு அலெக்ஸ் மற்றும் அவனது கூட்டாளிகள் தப்பியோடினர்.
இதுகுறித்து திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர், இந்த சம்பவம் காட்பாடியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.