பான்-இந்தியன் படமான ‘என்.டி.ஆர்.30’-ல் VFX மேற்பார்வையாளர் பிராட் மின்னிச் இணைந்திருப்பதன் மூலம் இன்னும் பிரம்மாண்டமாக மாறி இருக்கிறது
மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘என்டிஆர் 30’ படத்தின் படக்குழு இரண்டு குறிப்பிடத்தக்க அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டுள்ளது. ஆக்ஷன் புரொட்யூசர் கென்னி பேட்ஸ் படத்தில் இணைந்ததை முதலில் படக்குழு அறிவித்தது. இப்போது, மூத்த VFX மேற்பார்வையாளரான பிராட் மின்னிச், NTR Jr’s- ன் படத்தில் இணைந்துள்ளதை படக்குழு அறிவித்துள்ளது.
பிராட் மின்னிச் ஒரு புகழ்பெற்ற VFX மேற்பார்வையாளர். அவர் பேரழிவு காலநிலை மாற்றங்கள் மற்றும் Super-powered emerald energies-க்கு நிபுணத்துவம் பெற்றவர். Obi-Wan Kenobi (2022), Zack Snyder’s Justice League (2021), The Good Lord Bird (2020), Aquaman (2018), மற்றும் Batman vs Superman (2016) உள்ளிட்ட பல்வேறு வெற்றிகரமான படங்களில் அவர் பணியாற்றியுள்ளார். ‘என்டிஆர் 30’ அவர் பணியாற்றும் முதல் இந்தியப் படமாகும்.
மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘என்.டி.ஆர்.30’ படம் யுவசுதா ஆர்ட்ஸ் தயாரிப்பில், NTR Arts பேனரின் கீழ் நந்தமுரி கல்யாண் ராம் வழங்குகிறார். இந்தப் படம் மூலம் ஜான்வி கபூர் தெலுங்கில் அறிமுகமாகிறார். கொரட்டாலா சிவா இயக்கத்தில் ‘யங் டைகர்’ NTR Jr நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியன் படமாக 2024 ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகிறது.