இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல் சிறந்த துணை நடிகருக்கான வாய்ப்பை இழந்தார்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெறுவதற்கான வாய்ப்பை இழந்தார். ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்தது. இந்த விழாவில் 24 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கு மஹெர்ஷலா அலி, தேவ் படடேல் உள்ளிட்டோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அந்த விருதை மஹெர்ஷாலா அலி தட்டிச் சென்றார். இதனால் அந்த வாய்ப்பை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல் இழந்தார். கடந்த 2009-ஆம் ஆண்டில் ஆஸ்கர் விருதுகளை குவித்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்தவர் தேவ் படேல் ஆவார். லயன் என்ற படத்தில் துணை நடிகராக நடித்ததற்காக இவரது பெயர் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.