இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன், “எங்கள் ஆதரவாளர்கள் யாரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆதரவு அளித்ததாக சந்தேகம் இருப்பின் தலைமைச் செயலகத்தில் நிரூபிக்க தயார். ஈபிஎஸ்- ஓபிஎஸ், பயத்தால் ஒன்று சேர்ந்த அணிகள். நாளை டிடிவி தினகரன் ஆளுநரை சந்திக்க இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.