ஹரிஷ், ஷீலா ராஜ்குமார், மதன் தட்சிணாமூர்த்தி, ஆழியா, திருநாவுக்கரசு, ஹரிதா, மஹினா, வசந்த் மாரிமுத்து, ஷோபன் மில்லர்
இயக்கம்: மதன் தட்சிணாமூர்த்தி
இசை: ராபர்ட் சற்குணம்
தயாரிப்பு: ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் – பிரக்னா அருண் பிரகாஷ்
ஒரே அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள் சனிக்கிழமை இரவு ஒன்றாக சேர்ந்து சத்தம் போட்டு விளையாட பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஒருவர் போலீசுக்கு புகார் அளிக்கிறார். அதனால், இரவு ரோந்து பணியில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் “அருவி” மதன் குமார் விசாரிக்க, அது வாக்குவாதம் ஆகிறது.
இதனால் கோபத்துடன் செல்கிறார் அருவி மதன். மறுநாள் காலை ஷீலா ராஜ்குமார் தன் மகள் கையில் இருந்த மொபைல் போனை திருட வந்தவரை சட்டை பிடித்து இழுக்க அவன் வீட்டின் உள்ளே வந்து விழுந்து இறந்து விடுகிறார்.
இரவில் நடந்த பிரச்சனைக்காக ஹரிஷ் உத்தமனை பழிவாங்கும் முயற்சியில் கைது செய்ய அருவி மதன் வீட்டிற்கு வருகிறார்.
வீட்டிற்குள் பிணம் இருப்பதால் ஹரிஷ் உத்தமனும் ஷீலா ராஜ்குமாரும் பதற்றம் அடைகின்றனர்.
அருவி மதனிடம் தம்பதிகள் இருவரும் மாட்டிக்கொண்டனரா? இல்லை தப்பித்தனரா? என்பதே நூடுல்ஸ் படத்தோட மீதி கதை