திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திடீர் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் துன்பத்திற்கும் துயரத்திற்கும் தொடர்ந்து ஆளாக்கப்பட்டு வருகிறார்கள் இதற்கு முடிவு வரவேணும் என்றால் நிச்சயமாக இதற்கு ஒரு நல்ல தீர்வு வேண்டும் என்பது தான் எங்களது எண்ணம் என்று கூறினார். மேலும் தேவைப்பட்டால் தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும். என்று தெரிவித்தார்.
