காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை அதிகாரிகளுக்கு தடங்கலில்லா அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் அவை கிரிமினல் சட்ட விதிகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார். மேலும், விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது எனவும் நீதிபதி எச்சரித்தார். இனி வரும் காலங்களில் விசாரணைக்கு அழைக்கப்படுபவர்களுக்கு எழுத்துபூர்வமாக ஆஜராக வேண்டிய தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு சம்மன் அனுப்பி அழைக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.