“காலா” படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி மகனாக நடித்துள்ள நித்தீஷ் வீரா
“வெண்ணிலா கபடி குழு” படம் பார்த்தவர்களுக்கு சில முகங்கள் அப்படியே அடி மனசில் தங்கியிருக்கும். கபடி டீம் கேப்டனாக வரும் நித்தீஷ் வீரா கேரக்டர் அப்படியே பாசியைப்போல மனதில் அப்பிக்கொள்ளும்.
சினிமாவில் அதிகம் பேர் ஜெயித்த ஊர் மதுரை. மதுரையிலிருந்து சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு வரம் நித்தீஷ் வீரா.
இவர் கூத்துப்பட்டறை மாணவர். சுனாமி வந்த நாட்களில் சுனாமி விழிப்புணர்வு நாடகங்களை கூத்துப்பட்டறை மூலம் வீதிநாடகமாக அரங்கேற்றிய விஜய்சேதுபதி, நித்தீஷ் வீராவுக்கு “புதுப்பேட்டை” படத்தில் வாய்ப்பு கொடுத்தார் செல்வராகவன்.
அடுத்து தங்கர்பச்சான் இயக்கத்தில் “ஒன்பது ரூபாய் நோட்டு” படத்தில் சத்யராஜ் மகனாக நடித்தார்.
தொடர்ந்து “வெண்ணிலா கபடி குழு” சூப்பர் டூப்பர் ஹிட். யுவனின் “சிந்தனை செய்”, ஹரிதாஸ், “மாவீரன் கிட்டு”, “ராணி”, “நேற்று இன்று” இவர் நடித்த அத்தனை படங்களிலும் நித்தீஷ் வீரா கேரக்டர் பேசப்படும் கேரக்டர்களாகவே அமைந்தன.
இவர் ஹீரோவாக நடித்த “பற”, “கவாத்து” என ரெண்டு படங்கள் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது. “வெண்ணிலா கபடி குழு 2” விழும் பேசப்படும் கேரக்டர் நடித்துள்ளார்.
“காலா” படத்தில் 40 நாட்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி மகனாக நடித்துள்ளார். “காலா” படத்தின் சூட்டிங் நாட்களை பற்றி கேட்டால் அது மிராக்கிள் நாட்கள் என்கிறார்.
ரஞ்சித்தை ரொம்ப நாட்களாக ஃபாலோ பண்றேன் சூட்டிங் போறதுக்கு முன்னாடி வொர்க் ஷாப் நடத்தினார் இதில் 20 நாட்கள் கலந்து கொண்டேன். வொர்க் ஷாப்பே சூட்டிங் போல நடக்கும். “காலா” படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுமே வொர்க் ஷாப் செய்த பின்னரே படத்தில் நடிக்க வைத்தார்.
“காலா” ஃபர்ஸ்ட்டே சூட்டிங் எனக்கு என்ன கேரக்டர்னே தெரியல. சூட்டிங் வந்த ரஞ்சித் நீ தான் ரஜினியோட மூத்த மகன்னு சொன்னார். அப்படியே ஒரு நிமிஷம் ஷாக் ஆயிடுச்சு. இந்தியாவின் சூப்பர் ஸ்டார்க்கு மகனானு.
சூட்டிங் வந்த சூப்பர் ஸ்டார் ஹாய் ஹாய் எப்படி இருக்கீங்க. இப்போ என்னென்ன படம் போயிட்டு இருக்குனு தோளில் கை வச்சு கேட்டார். இப்போ வரைக்கும் மனச விட்டு அகலமாட்டிங்குது. நடித்த நாப்பது நாளில் சூப்பர் ஸ்டாரின் நடிப்பு, எளிமை, ஷார்ப்னஸ், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்களை கற்றுக்கொண்டேன். சூப்பர் ஸ்டார் என்னனா நானே படேகர் நடிப்பதை வியந்து பார்ப்பார்.
லாஸ்ட் செட்யூல், லாஸ்ட் டே, காலைல ஏழு மணிக்கு ஸ்பாட்டுக்கு வந்த அவர், அடுத்த நாள் காலை ஆறு மணி வரை புகையிலும், புழுதியிலும் உட்கார்ந்தே இருந்தார். அதனால் தான் இன்னைக்கும் அவர் சூப்பர் ஸ்டார்.
இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத படமான காலாவில் முக்கியமான பாத்திரம் ஏற்றிருக்கும் நித்தீஷ் வீரா, எனக்கு ஸ்கோப் இருக்கும் எந்த படத்திலும் நடிக்க தயார் என்கிறார்.