ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் அசோக் செல்வன், யாருடனும் அதிகம் பேசாமல், பழகமால் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். அவருக்கு பெற்றோர் பெண் பார்த்து திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். பெற்றோர்கள் பார்த்த பெண் அசோக் செல்வனை அதிகம் கவர்ந்துவிட, தன்னை நேசித்த முதல் பெண் என்பதால் அவள் மீது அதிகமாக அன்புகொள்கிறார். இதற்கிடையே திருமணத்திற்கு முதல் நாள் மணப்பெண்ணால் திருமணம் நின்றுவிடுகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் அசோக் செல்வன், அதில் இருந்து மீண்டு வர மருத்துவர் அபிராமியிடம் சிகிச்சைக்கு போகிறார்.
அசோக் செல்வனின் நிலையை புரிந்துகொள்ளும் அபிராமி, தன்னுடைய வாழ்வில் சந்தித்த வீரா – லட்சுமி மற்றும் பிரபா – மதிவதணி ஆகியோரின் கதை எழுதிய டைரியை கொடுக்கிறார். அந்த இரண்டு கதைகளையும் படிக்க தொடங்கும் அசோக் செல்வன், அந்த கதைகளில் ஐக்கியமாகி விடுகிறார். ஆனால், அந்த இரண்டு கதைகளிலும் முடிவு இல்லாமல் இருக்கிறது. அந்த கதைகளின் முடிவு என்னவாக இருக்கும்? என்பதை தெரிந்துக்கொள்வதில் அசோக் செல்வன் ஆர்வம் காட்டுகிறார். ஆனால் மருத்துவர் அபிராமி, அந்த கதையின் முடிவுகளை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால், அவர்களை நீயே நேரில் சென்று பார், என்று கூறி அவர்கள் தற்போது வாழும் முகவரியை அசோக் செல்வனுக்கு கொடுக்கிறார்.
அவர்களை தேடி செல்லும் அசோக் செல்வன் வீரா – லட்சுமி மற்றும் பிரபா – மதிவதணியை சந்தித்தாரா? பிறகு நடந்தது என்ன என்பதே நித்தம் ஒரு வானம் படத்தின் மீதிக்கதை.
நடிகை-நடிகர்கள்:
அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் மற்றும் பலர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
தயாரிப்பு : ஸ்ரீநிதி சாகர் மற்றும் பி.ரூபக் பிரணவ் தேஜ்
இயக்கம் : ரா. கார்த்திக்
இசை : கோபி சுந்தர்
மக்கள் தொடர்பு : யுவராஜ்