நிறங்கள் மூன்று விமர்சனம்

ஐங்கரன் இன்டர்நேஷனல் சார்பில், கே.கருணாமூர்த்தி தயாரிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் நிறங்கள் மூன்று.

ரஹ்மான் ஒரு பள்ளி ஆசிரியர், பல மாணவர்களுக்கு பிடித்த முன்னுதாரணமான ஆசிரியராக இருக்கிறார். அவ​ர் தனது மாணவர் துஷ்யந்த் ஜெயபிரகாஷ்க்கு ஏற்படும் குடும்ப பிரச்சனைக்கு உதவி செய்கிறார். அதனால் துஷ்யந்த்க்கு ரகுமான் மீது கூடுதல் மரியாதை ஏற்படுகிறது. துஷ்யந்த் ரஹ்மான் மகள் அம்மு அபிராமி மீது காதல் கொண்டிருந்தார். ஒரு நாள் அம்மு அபிராமி காணாமல் போகிறாள். அம்மு அபிராமியை துஷ்யந்த் கண்டு பிடிக்க முயற்சி செய்கிறார்.

அதர்வா இயக்குனராக வேண்டும் என்ற கனவில் ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமாக ஏரி இறங்குகிறார் ஆனால் அவருக்கு நிராகரிப்பு மட்டுமே பதிலாக கிடைக்கிறது. இதனால் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார். அதர்வாவின் அப்பாவாக சரத்குமார் அவர் ஒரு ஊழல் செய்யும் லஞ்சம் வாங்கும் காவலராக இருக்கிறார்.

அதர்வாவும் சரத்குமாரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

சரத்குமாருக்கும் அமைச்சரின் மகனுக்கும் பிரச்சனை ஏற்பட அதன் காரணமாக அதிர்வாவை தாக்குவதற்காக அமைச்சரின் மகனின் ஆட்கள் முயற்சி செய்கிறார்கள்.

அதர்வாவின் கதை திருடப்படுகிறது அதற்குக் காரணம் தன் அப்பாவான சரத்குமார் என்று தெரிய வர அவர் மேல் ஆத்திரம் அடைகிறார்.

அமைச்சரின் மகனுக்கும் சரத்குமாருக்கும் என்ன பிரச்சனை? அதர்வாவின் கதையை சரத்குமார் திருடியது ஏன்? அம்மு அபிராமி காணாமல் போக காரணம் என்ன? என்பதை நிறங்கள் மூன்று படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு : டிஜோ டாமி
இசை : ஜேக்ஸ் பெஜாய்
எடிட்டிங் : ஸ்ரீஜித் சாரங்
மக்கள் தொடர்பு : டைமண்ட் பாபு, சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ.நாசர்