நினைவிருக்கா அன்பே நினைவிருக்கா இடமிருக்கா நெஞ்சில் இடம் இருக்கா… என்ற
பாடல் காட்சி திரைப்பட வடிவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
கதையின் நாயகன் நிஜய், கதாநாயகி ஜாராவை விரும்புகிறான். ஆனால் அந்தப் பெண் அவனை விரும்ப முடியாத சூழ்நிலை. காரணம் என்னவெனில் தன்னுடைய பெற்றோர்கள் ஊனமுற்றவர்கள் என்பதால் அவர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறாள் என்பதை நாயகன் நிஜய் உணர்ந்து கொள்கிறான். அதே நேரத்தில் மற்றொரு பெண்ணான அன்வித்தாவின மானத்தை காப்பாற்றுகிறான்.அதன் காரணமாக அன்வித்தாவிற்கு நாயகன் நிஜய் மீது காதல் கொல்கிறாள். இதை அறிந்து நிஜய் தான் நேசித்த அவள் கிடைக்கவில்லை, எனவே தன்னை நேசித்த அவளை நிஜய் ஏற்றுக் கொள்கிறான் இந்த கதைக்கருவை அடிப்படையாகக் கொண்டு பாடல் காட்சியில் ஒரு கதையை சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது வலைதளத்தில் வெளிவந்து பல்வேறு ரசிகர்கள் மத்தியில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாயகனாக நிஜய் நடிக்க நாயகிகளாக ஜாரா, அன்வித்தா நடித்திருக்கின்றனர். இந்த கதையசம் கொண்ட பாடல் காட்சியை இயக்கியவர்
ஊ.குமரவேல்.
இயக்கம்- ஊ.குமரவேல்
தயாரிப்பு-
லைவ் ஆர்ட்ஸ் மேக்கர்ஸ்
இசை- மணி அமுதன்
ஒளிப்பதிவு-
சிவபாஸ்கரன்
பி.ஆர்.ஓ- வெங்கட்