நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்”  விமர்சனம்

நடிகர் தனுஷ் இயக்கத்தில், பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா  வாரியர், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன், சித்தார்தா ஷங்கர், ராபியா கதூன், R சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், உதய் மகேஷ், ஶ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” 

நாயகன் பவிஷ் நாராயன் காதலில் தோல்வி அடைந்து சோகத்தில் இருக்கிறார் இந்த நேரத்தில் பவிஷின் பெற்றோரான சரண்யா பொன்வண்ணன் மற்றும் ஆடுகளம் நரேன் இருவரும் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்கள். 

பெண் பார்க்கும் இடத்தில் தனக்கு பார்த்திருக்கும் பெண் தன்னுடன் பள்ளியில் படித்த பிரியா வாரியர் என்று தெரிய வருகிறது. 

அதனால் இருவரும் நாங்கள் ஒருவருக்கொருவர் பழகி புரிந்து கொள்ள சிறிது காலம் அவகாசம் கேட்கின்றனர். அதற்கு இருவரின் பெற்றோர்களும் சரி என்று சொல்கிறார்கள் பிரியா வாரியரும் பவிஷும் ஒருவருக்கொருவர் பேசி பழக ஆரம்பிக்கிறார்கள். 

ஒரு கட்டத்தில் முடிவெடுக்கும் சமயத்தில், அனிக்காவின் திருமண பத்திரிக்கை வர அதனை பிரியா வாரியரிடம் சொல்றார் பவிஷ். அப்பொழுது பிரியா பவிஷிடம் உன்னுடைய முன்னாள் காதலியை பற்றி சொல்லவும் என்று சொல்கிறார்.

பவிஷும் தன்னுடைய முன்னாள் காதலியை பற்றி பிரியா வாரியரிடம் சொல்கிறார்.

செஃப் ஆக வேலை செய்யும் பவிஷுக்கும் அனிகாவுக்கும் நட்பு ஏற்பட்டு அந்த நட்பு காதலாக மாறுகிறது. இவர்களின் காதலை பவிஷன் வீட்டில் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் மிகப்பெரிய பணக்காரரான அனிகாவின் அப்பாவான சரத்குமாருக்கு பவிஷை பிடிக்காமல் போக அவர்களின் காதலை ஏற்க மறுக்கிறார்.

இருப்பினும் மகளின் ஆசைக்காக பவிஷை புரிந்து கொள்வதற்காக சில நாட்கள் பவிஷீடன் பழக ஆரம்பிக்கிறார் சரத்குமார். ஆனால் சில நாட்களில் எந்த காரணமும் சொல்லாமல் அனிகாவை விட்டு பிரிகிறார் பவிஷ். இந்த கதையை கேட்டு விட்டு பிரியா வாரியர் பவிஷை அந்த திருமணத்திற்கு போக சொல்கிறார். 

பிறகு நடந்தது என்ன அனிகாவும் பவிஷும் சேர்ந்தார்களா? இல்லை பிரியா வாரியரும் பவிஷம் சேர்ந்தார்களா? என்பதே நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

எழுத்து மற்றும் இயக்கம் : தனுஷ் 

தயாரிப்பு : கஸ்தூரிராஜா & விஜயலட்சுமி கஸ்தூரிராஜா 

தயாரிப்பு நிறுவனம் : வுண்டர்பார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் 

இசை : ஜிவி பிரகாஷ் குமார் 

ஒளிப்பதிவு : லியோன் பிரிட்டோ 

படத்தொகுப்பு : பிரசன்னா ஜிகே 

கலை இயக்கம் : ஜாக்கி

நடன இயக்கம் : பாபா பாஸ்கர் 

ஆடை வடிவமைப்பு : காவியா ஸ்ரீராம் ஆடைகள் : நாகு 

ஒப்பனை : பி ராஜா 

படங்கள் : முருகன்

விளம்பர வடிவமைப்பு : கபிலன் செல்லையா ஒளி வடிவமைப்பு : ஸிங்க் சினிமா 

தயாரிப்பு நிர்வாகி : ரமேஷ் குச்சிராயர்  நிர்வாக தயாரிப்பாளர் : ஸ்ரேயாஸ் ஸ்ரீனிவாசன்

மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது, பாரஸ் ரியாஸ்

ரேட்டிங் 3/5