தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் மந்தோப்பு சாலையில் டெங்க விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கை, நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஸ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
மேலும் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் வணிகர்கள் பொது மக்களுக்கு இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும், தங்கள் நிறுவனங்களில் தண்ணீர் தேங்காதவறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரைத்தினார்.நிகழ்ச்சியல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முருகேசன், மாரிச்சாமி,பொன்ராஜ் கலந்து கொண்டனர்.